அஜீத் நடிக்கும் 'என்னை அறிந்தால்', இம்மாதம் 29ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்துடன் சூர்யா நடித்துள்ள 'மாஸ்' படத்தின் டிரெய்லரை வெளியிட யோசித்து வருகிறார்களாம். அஜீத் படம் என்பதால் கிராண்ட் ஓபனிங் படத்துக்கு இருக்கும். அத்துடன் தமது படத்தின் டிரெய்லரை வெளியிட்டால் ரசிகர்களை எளிதில் கவரலாம் என 'மாஸ்' டீம் மாஸ்டர் பிளான் போடுகிறதாம். மேலும் மாஸ் பட டைரக்டர் வெங்கட் பிரபு, அஜீத்தின் நெருங்கிய நண்பர்.
அவர் இது பற்றி அஜீத்திடம் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அஜீத் படம் தள்ளிப்போகும் என்றும் கோடம்பாக்கத்தில் தகவல் பரவியது. ஆனால் இதை படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார். வரும் 21ம் தேதி சென்சாருக்கு படம் போகிறது. 29ல் திட்டமிட்டபடி ரிலீசாகும் என்றார்.
0 comments:
Post a Comment