ஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். நம் உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் பொறுப்பு இந்த புரதத்துடையதாகும்.
இது வயது வந்த ஆண்களுக்கு 14 - 18 மி.கி./டெ.லி. மற்றும் வயது வந்த பெண்களுக்கு 12 - 16 மி.கி./டெ.லி இருக்க வேண்டும்.
பல நேரங்களில், சிவப்பு ரத்த அணுக்கள் குறைவாக இருப்பதால் ஹீமோகுளோபினும் குறைந்துவிடும்.
அதனால் ஹீமோகுளோபின் குறைவிற்கு பின்னணியில் உள்ள காரணத்தை பொறுத்து, அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான இயற்கையான வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
போலிக் அமிலம் நிறைந்த உணவுகள்
சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். அதனால் ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை இல்லை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, சத்தூட்டப்பட்ட தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள்.
பீட்ரூட்
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேர்த்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உண்ணுங்கள்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக உள்ளது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து ஒரு முக்கியமான பொருளாக விளங்குகிறது. ஈரல், சிகப்பு இறைச்சி, இறால், டோஃபு, கீரைகள், பாதாம், பேரிச்சம் பழம், பயறு, சத்தூட்டிய காலை உணவு தானியங்கள், கடல் சிப்பிகள் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவும்.
மாதுளைப்பழம்
மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
உடற்பயிற்சி
தினமும் சில உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க உங்கள் உடல் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும். ஆகவே மிதமான அளவு முதல் கடினமான அளவு வரையிலான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
வைட்டமின் சி நிறந்த உணவுகள்
வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும். வைட்டமின் சி வளமையாக உள்ள பப்பாளி, ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ், தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றை உண்ணவும். அதிலும் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி அடங்கியுள்ள மாத்திரைகளையும் உண்ணலாம்.
கருப்பு சர்க்கரைப்பாகு
இரத்த சோகையை எதிர்த்து போராடவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நாட்டு சிகிச்சையான சர்க்கரைப்பாகுவை பயன்படுத்தலாம். சர்க்கரைப்பாகுவில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இது சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 2 டீஸ்பூன் சர்க்கரைப்பாகுவை 2 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர் நாற்றும் 1 கப் தண்ணீருடன் கலந்திடுங்கள். இதனை தினமும் ஒரு முறை குடியுங்கள்.
0 comments:
Post a Comment