கடந்த பொங்கல் தினத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த 'ஐ' மற்றும் ஆம்பள' படங்களின் ரிசல்ட் கலவையாக வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான ஜி.வி.பிரகாஷின் 'டார்லிங்' திரைப்படத்திற்கு ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
டார்லிங் படம் வெளியான இரண்டாவது நாளே 25 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை திங்கட்கிழமை முதல் குறைந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
காமெடி திரைக்கதை, ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மற்றும் இசை, ஜாலியாக போகும் காமெடி காட்சிகள் ஆகியவை படத்தின் பிளஸ்ஸாக அமைந்துள்ளதால் ஆடியன்ஸ் கூட்டம் அதிகரித்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன. இதனால் 'டார்லிங்' படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
0 comments:
Post a Comment