இவர் 31 பந்துகளில் சதம் அடித்தார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
அவரின் உலகசாதனையை இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முறியடித்து விட்டார் டிவில்லியர்ஸ்.
டிவில்லியர்ஸ் வானவேடிக்கை காட்டிய இந்தச் சதத்தில் 11 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். இந்தப் போட்டியில், டிவில்லியர்ஸ் மொத்தம் 16 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 44 பந்துகளில் 149 ஓட்டங்கள் குவித்தார்.
அதேவேளையில், தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 142 பந்துகளில் 153 ஓட்டங்களும், ரோசோவ் 115 பந்துகளில் 128 ஓட்டங்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 439 ஓட்டங்கள் குவித்தது.
முன்னதாக டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் அரை சதத்தைக் கடந்து அதிலும் புதிய உலக சாதனை படைத்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜோஹன்னஸ்பர்க் மைதானம் தென் ஆப்பிரிக்காவுக்கு மிகவும் ராசியான இடமாகும். மேலும் பல சாதனைகளையும் இது அங்கு படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2005-06 ஒரு நாள் போட்டித் தொடரில், முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 434 ஓட்டங்களை குவித்து புதிய உலக சாதனை படைத்தது.
ஆனால் அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலிய பந்து வீச்சை பிரித்து மேய்ந்து 438 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றதோடு அவுஸ்திரேலிய சாதனையை சில மணி நேரங்களிலேயே தகர்த்து வீசியது நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment