பல்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு ‘லிவிங் மெமோரியல்’ என்ற நிகழ்வை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிரிழந்த 74,187 இந்திய வீரர்களின் நினைவை போற்றும் விதமாக மரக்கன்று நடும் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக திகழ்ந்த சச்சின் தெண்டுல்கர், ஆஸ்கார் விருது நாயகன் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் ஜெயம் ரவி, சரத்குமார், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், பிரேம்ஜி அமரன், இமான் அண்ணாச்சி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
நடிகர் கமலஹாசனும் இந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு, வீரர்களின் நினைவை போற்றும் விதமாக மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களின் நூற்றாண்டு நினைவு விழாவை கொண்டாடவிருக்கிறோம். முதலாம் உலகப் போரில் கிட்டத்தட்ட 67,000 வீரர்கள் காயமடைந்தார்கள், 74,000 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
அவர்கள் அனைவரும் இந்தியாவிற்காகதான் உயிரிழந்தார்கள். அவர்களின் தியாகம் மறக்கப்படக்கூடாது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவர்களின் நினைவாகவும் நான் ஒரு மரக்கன்றை நட்டுள்ளேன்.
நம் நாட்டிற்காக போராடிய வீரர்களின் நூற்றாண்டு நினைவு விழா இது. அவர்களின் நினைவாக உங்கள் அனைவரையும் நான் இதையே செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.ஒரு மரக்கன்றை நடுங்கள், இதன் மூலம் நம்முடைய வீரர்களுக்கு மரியாதை செலுத்துவோம் என்று கூறினார்.
0 comments:
Post a Comment