அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
மெல்போர்னில் இ்னறு நடந்த லீக் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்திய அணியில் காயத்தால் அவதிப்படும் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு, ‘சுழல்’ வீரர் அக்சர் படேல் இடம்பிடித்தார். அவுஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் குரிந்தர் சாந்து அறிமுக வாய்ப்பு பெற்றார்.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் டோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, தவான் களமிறங்கினர்.
ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் 2 ஓட்டங்களில் அவுட்டானார். இதையடுத்து ரஹானே, ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானதாக விளையாடி ரன்களை குவித்த நிலையில் அறிமுக வீரர் சாந்து வீசிய ஓவரில் ரஹானே 12 ஓட்டங்களில் வெளியேறினார். இதையடுத்து கோஹ்லி களமிறங்கியுள்ளார்.
அவரும் பால்க்னர் வீசிய பந்தை தூக்கியடிக்க முற்பட்டு தனது விக்கெட்டை 9 ஓட்டங்களில் பறிகொடுத்தார். இதையடுத்து ரெய்னா களமிறங்கினார்.
அவரும், ரோஹித்தும் இணைந்து அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்து 4வது விக்கெட்டுக்கு 126 ஓட்டங்களை குவித்தனர். இந்நிலையில் ஸ்டார்க் வீசிய பந்தில் 51 ஓட்டங்களில் ரெய்னா அவுட்டானார்.
இதையடுத்து அணித்தலைவர் டோனி களமிறங்கினார். ரெய்னா அவுட்டான சில நிமிடங்களில் ரோஹித் தனது சதத்தை பூர்த்தி செய்தார்.
சிறிது நேரத்திலேயே டோனி 19 ஓட்டங்களில் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் மறுமுனையில் ரோஹித் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்.
டோனிக்கு பின் வந்த அக்சர் படேல் டக் அவுட்டாகி வெளியேற, 49 ஓவரின் போது 138 ஓட்டங்களில் ரோஹித் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் பெரிதாக ஓட்டங்கள் குவிக்காத நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
வெற்றிக்கு 268 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக ஆரோன் பின்ஞ், வார்னர் களமிறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். வார்னர் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில், உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வாட்சன் பின்ஞ் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் ஓட்டங்களை சற்று உயர்த்தினர். அணி 115 ஓட்டங்கள் எடுத்த போது வார்னர் அக்சர் படேல் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ஸ்மித், பின்ஸ் உடன் சேர்ந்து அணிக்கு வலுவான நிலையை அமைத்தார். பின்ஞ் 96 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சத்ததை தவறவிட்டார். அதே போல ஸ்மித் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.
அணித்தலைவர் பெய்லி 5 ஓட்டங்களில் நடையை கட்ட, மேக்ஸ்வெல் 20 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் ஹாடின் (13), பாக்னர் (9) களத்தில் இருந்து இலக்கை எட்டினர்.
இதனால் அவுஸ்திரேலியா ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டை இழந்து 269 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், அஸ்வின், முகமது ஷமி, அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
6 விக்கெட்டை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment