சம்பியன்ஸ் டிராபி ஹொக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி ஜேர்மனி சம்பியன்
சம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளது. 3ம் இடத்துக்கான போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்: இந்தியன் ஏசஸ் அணி கிண்ணம் வென்றது
சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியில் 4வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் துபாயில் மூன்று நாட்கள் நடந்தது. 4 சுற்று முடிவில் இந்தியன் ஏசஸ் அணி 39 புள்ளிகளுடன் (8 வெற்றி, 4 தோல்வி) முதலிடத்தை பிடித்து கிண்ணத்தை தட்டிச் சென்றது.
மலிங்கா உலகக்கிண்ணப் போட்டிகளில் களமிறங்குவாரா?
மலிங்கா அணியில் இருந்து விலகியதன் காரணமாகவே இந்திய சுற்றுப்பயணம் சென்ற இலங்கை அணி 0-5 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.
அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ணப் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மலிங்கா ஜனவரி மாத நடுவில் மீண்டும் பழைய நிலைக்கு திருப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் எனது காயம் இன்னும் குணமடையவில்லை என இலங்கை பத்திரிக்கை ஒன்றில் மலிங்கா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் மீண்டும் விளையாட தயாராக இருக்கிறேன். ஆனால் எனது காயம் குணமடைய எவ்வளவு நாள் எடுத்துக் கொள்ளும் எனத் தெரியவில்லை. அதனால் தான் நான் பயிற்சியில் கூட ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment