திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவில் திடீரென இளம்பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் முத்தப் போராட்டம் நடத்தியுள்ளனர். |
கேரளாவில் ‘கலாசார காவலர்கள்’ என்ற பெயரில் சிலர் பொது இடங்களில் நடத்தும் வன்முறை சம்பவங்களை கண்டிப்பதாகக் கூறி ‘கிஸ் ஆப் லவ்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் முத்தம் கொடுத்தும், கட்டிப்பிடித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு இந்து அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் 19வது சர்வதேச திரைப்பட விழா 12ம் திகதி தொடங்கியது. இதையொட்டி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சினிமா கலைஞர்கள் குவிந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள கைரளி, நிலா, ஸ்ரீ, நியூ உட்பட 12 திரையரங்குகளில் ஈரான், பெல்ஜியம், சீனா, துருக்கி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இந்நிலையில் நேற்று பகல் 1 மணியளவில் சில இளம்பெண்கள் உட்பட சுமார் 20 பேர் கைரளி திரையைரங்கு முன் முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் திரையரங்குக்கு வந்தவர்களிடம் பிட் நோட்டீஸ்களை விநியோகித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த இளம்பெண்களும், வாலிபர்களும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த ஏராளமானோர் முத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்த்து கூச்சலிட்டனர். இதையடுத்து அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து பொலிசார் விரைந்து செயல்பட்டு இரு பிரிவினரையும் அமைதிப்படுத்தினர். |
திரைப்பட விழாவில் திடீரென்று கட்டிப் பிடித்து ஒரு முத்தம்: அதிர்ச்சியில் பார்வையாளர்கள்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment