சுவிஸ் நாடானது ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து வரும் எண்ணிக்கையை கட்டுப்பத்தும் சட்டத்தினை கொண்டுவந்ததன் விளைவாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
அதாவது சுவிஸின் ஜெனிவாவில், மனித மூளையின் செயல்பாடு மற்றும் செயல்கள் குறித்த ஆராய்ச்சியானது நடைபெற்று வருகிறது.
இதில், மனிதனாகப் பிறந்தவனுக்கு என்ன காரணத்தினால் மூளையில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன, மேலும் இதன் ஞாபகமறதிகள் குறித்த நோய்கள் தொடர்பாக ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 500 பேர்களில் பிற நாடுகளிலிருந்து 22 பேர் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் பிரச்சனையால் இந்த ஆய்வினை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதற்கு வழங்கப்படும் நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment