தமிழ் சினிமாவில் எப்போதும் மலையாள மங்கைகளுக்கு ஒரு தனி இடம் உண்டு. அதில் குறிப்பிடும் வகையில் நடித்த 5 படங்களின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் ஷாலினி. இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படமான எண்ட மமட்டிக்குட்டியம்மாவுக்கு படத்தில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து தமிழில் பந்தம் படத்தின் மூலம் கோலிவுட் வாசலுக்கு வந்தார். சிறு வயதிலேயே தன் துறுதுறு பேச்சால் அனைவரின் உள்ளங்களை கவர்ந்தார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த விடுதலை, ராஜா சின்ன ரோஜா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இவர் முதன் முதலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் காதலுக்கு மரியாதை. இப்படத்தின் மூலம் காதலுக்கு மட்டும் மரியாதை கிடைக்கவில்லை, ஒட்டு மொத்த தமிழகத்திற்கு இவர் மேல் நல்ல மரியாதை கிடைத்தது.
இதை தொடர்ந்து அலைப்பாயுதே, அமர்க்களம் என இவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான். இதில் ஷாலினிக்கு அமர்க்களம் எப்போதும் ஸ்பெஷல் தான். அதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தன் வருங்கால வாழ்க்கை துணையை அவர் இந்த படத்தின் மூலம் தான் பெற்றார்.
இன்று தமிழகமே தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் தல அஜித்துடன் காதல் கொண்டு, பின் அவரையே மணந்தார். இதன் பின் இவர் திரைத்துறைக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர இல்லத்தரசியானார். அஜித் இன்று இத்தனை உயரங்களை தன் வாழ்வில் அடைந்தார் என்றால் கண்டிப்பாக அதற்கு முழுக்காரணமும் அவரது மனைவி ஷாலினி மட்டுமே என்றால் மிகையாகது. இதை பல பேட்டிகளில் அஜித்தே கூறியுள்ளார்.
இவர் நடித்தது 5 படங்களாக இருக்கலாம், ஆனால், இன்று இவரை யாரும் மறப்பதாக இல்லை, தன் நடிப்பால் எல்லோர் மனதையும் வென்றவர். அவர் இன்று போல் என்று சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறி, ஷாலினி அஜித் அவர்களுக்கு சினி உலகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment