ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பாயும்புலி படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறாராம். மேலும் சமுத்திரகனி நடிக்கும் ராவா படத்திலும் நடிக்கிறாராம்.
இதையடுத்து, ஐஸ்வர்யா மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறாராம். இவரிடத்தில் தமிழ் சினிமாவில் உங்களை அதிகம் கவர்ந்த ஹீரோ யார்? என்று கேட்டால், துளியும் தாமதிக்காமல் தல அஜித் என்று கூறுகிறார்.
இது பற்றி ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது :
நான் தமிழ் படத்தில் நடிக்க கமிட்டானபோதில் இருந்தே அஜித்தின் பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடித்து விட்டன.
இப்போது கூட படம் பார்க்க வேண்டும் போல் இருந்தால் என்னை அறிந்தால் படத்தை தான் பார்ப்பேன். அந்த வகையில் அந்த படத்தை மட்டும் இதுவரை நான் 20 தடவை பார்த்திருக்கிறேன்.
அந்த அளவுக்கு அஜித் தனது நடிப்பால் என்னை கொள்ளை கொண்டு விட்டார். அதன் காரணமாகவே அவருடன் எப்படியாவது டூயட் பாடி விட வேண்டும் என்கிற ஆசை எனக்குள் அலைமோதத் தொடங்கியிருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் அஜித் நடிக்கும் புதிய படங்களில் நடிக்க முயற்சி எடுப்பேன் என்று ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment