விவேக் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பாலக்காட்டு மாதவன்’. சோனியா அகர்வால் ஹீரோயின். எம்.சந்திரமோகன் இயக்கம். எஸ்.சஜீவ் தயாரிப்பு. ஸ்ரீகாந்த்தேவா இசை. இதன் ஆடியோவை அனிரூத் வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றார். பிறகு விவேக் பேசியது:காமெடி நடிகருடன் நடிக்க எல்லா ஹீரோயின்களும் தயங்குகிறார்கள். சாக்குபோக்கு சொல்லி தட்டிகழித்துவிடுவார்கள். தங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஹீரோயின்களிடம் கேட்டால் நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும் என்பார்கள்.
ஆனால் காமெடி நடிகருக்கு கால்ஷீட் மட்டும் தரமாட்டார்கள். ஆனால் சோனியா அகர்வால் என்னுடன் ஜோடியாக நடித்துள்ளார். அவரது இடுப்பை கிள்ளும் காட்சியில் நடிக்க தயங்கினேன். உடனே அவர், ‘நடிப்புதானே கூச்சப்பட வேண்டாம். இனி இது உங்க ஏரியா தாராளமா கிள்ளுங்க’ என்றார். பிறகு புகுந்துவிளையாடிவிட்டேன். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. இலவசமாக எடுக்கலாம் என்று சொல்லி அழைத்துச் சென்ற இடங்களில்கூட காசு வசூலித்துவிட்டார்கள். விலை உயர்ந்த கார்கள் பயன்படுத்தியதால் அதற்கு அதிக வாடகையும் கொடுத்தோம். படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டது. இவ்வாறு விவேக் பேசினார்.
0 comments:
Post a Comment