இதை மையமாக வைத்து உருவாக்கப்படும் செயலிகளும் நமது அன்றாட வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றும் வண்ணம் நம் வாழ்க்கையோடு இணைந்து விட்டன.
ஆண்டிராய்டு Operating System, ஆண்டிராய்டு நிறுவனத்தால் 2003ம் ஆண்டு உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதனை 2005ம் ஆண்டு கூகுள் வாங்கியது.
இதைத் தொடர்ந்து பல பரிணாமங்களில் ஆண்டிராய்டு Operating System தனது உருவத்தை பெற ஆரம்பித்தது. இவை ஸ்மார்ட் போன் உலகத்தில் பெரிய அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்தன.
ஆண்டிராய்டு operating system வகைகள்:-
* Alpha (1.0)
* Beta (1.1)
* Cupcake (1.5)
* Donut (1.6)
* Eclair (2.0–2.1)
* Froyo (2.2–2.2.3)
* Gingerbread (2.3–2.3.7)
* Honeycomb (3.0–3.2.6)
* Ice Cream Sandwich (4.0–4.0.4)
* Jelly Bean (4.1–4.3.1)
* KitKat (4.4–4.4.4, 4.4W.1–4.4W.2)
இதைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது தான் Lollipop (5.0–5.0.2), இது கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் வெளியிடப்பட்டது.
ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த Operating System, போனில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் சார்சை கட்டுப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படுள்ளது.
Android 5.1 அதாவது, மாற்றி அமைக்கப்பட்ட Lollipop operating system பெப்ரவரி மாதம் வெளியானது, பலருக்கும் இது புதிய ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கும்.
இதில் "Project Volta" என்ற திட்டமானது பேட்டரி விரைவில் தீர்ந்து விடுவதற்கு ஒரு தீர்வை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. "Battery Historian" என்ற அமைப்பு பேட்டரியை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது.
கணனியில் உள்ள Graphics அம்சங்கள் இதில் பொருந்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது விளையாட்டு பிரியர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை தரும்.
மேலும் நாம் இணையத்தில் மூழ்கிக் கிடக்கும் போதும், சில முக்கிய தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கவும் சில பாதுகாப்பு அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போது பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் KitKat operating system-யை, Lollipop operating system ஆக மாற்றி உபயோகிக்கும் வகையில் சந்தைகளில் ஸ்மார்ட் போன் வெளிவரத் தொடங்கியுள்ளது.
0 comments:
Post a Comment