பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்து உலக சாதனை படைத்துள்ள நிலையில் அவர் இசையமைத்த பாடல்களை அவருடைய அனுமதியில்லாமல் பலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு தான் வருகிறோம். சமீபத்தில் கூட ஷங்கரின் 'கப்பல்' படத்தில் கூட இந்த சர்ச்சை எழுந்தது.
இதற்கெல்லாம் முடிவு கட்ட இசைஞானி இளையராஜா ஒரு அதிரடி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இசைஞானி இசையமைத்த 1000 படங்களின் பாடல்கள் உரிமையையும் அவர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தரவுள்ளதாவும், அதன் வருமானம் முழுவதும் தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கே பயன்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஒரு திரைப்பட விழாவில் கூறியுள்ளார்.
வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் இசைஞானியே நேரில் வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு இசைப்புரட்சியை அவர் செய்யவுள்ளதாகவும் தாணு தெரிவித்துள்ளார். இசைஞானி அவர்களின் இந்த முடிவால் தயாரிப்பாளர் சங்கம் சுபிட்சம் அடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment