லிங்கா விவகாரத்தில் தொடர் இழுபறி ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனையை தீர்த்துவிட வேண்டும் என்று நினைத்த ரஜினி, பிரபல விநியோகஸ்தரும், தனது நெருங்கிய நண்பருமான திருப்பூர் சுப்ரமணியத்தை அழைத்து அது தொடர்பான கணக்கு வழக்குகளை கவனித்து சொல்லும்படி கேட்டுக் கொண்டார். அவரும் தீர விசாரித்து முதல் தகவல் அறிக்கையை தந்திருக்கிறார். அதற்கப்புறம் இந்த விஷயத்தில் இப்போது திருப்பூராரின் ஆலோசனையை அவர் கேட்பதில்லையாம். இதில் சற்றே அப்செட் ஆன இவரும், ரஜினிக்கு எதிரான நிலைபாட்டை எடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில் ரஜினியை நேரில் சந்தித்த மதுரை பிரமுகர் ஒருவர், நிறைய ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம். இந்த ரூட் படி போனால் தனக்கு வந்திருக்கும் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்று ரஜினி நம்புகிறாராம். ஆனால் இவர் சரியான பாதையில் அவரை அழைத்துச் செல்வாரா? என்று ஆர்வத்தோடு கவனித்து வருகிறார்கள் இந்த விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே பஞ்சாயத்தில் ஈடுபட்டவர்கள்.
இதற்கிடையில் ரஜினிக்கு எதிராக பேசவோ, விமர்சிக்கவோ, அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும்படி நடக்கவோ கூடாதென நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி மேல் முறையீடு செய்யவும் தயாராகி வருகிறார்களாம் சிங்காரவேலன் குரூப்!
0 comments:
Post a Comment