கறுப்பின வீரர்களை குரங்கு என்று குறிப்பிடும் வகையில் அவர்களை நோக்கி வாழைப்பழத்தை இனவெறி கால்பந்து ரசிகர்கள் எறிகின்றனர்.
இது போன்ற செயல்களால் அவர்களை மனதளவில் காயப்படுத்தி களத்தில் திறமையாக செயல்பட முடியாமல் செய்வதே அந்த ரசிகர்களின் நோக்கமாக உள்ளது.
யூரோபா லீக் கால்பந்து போட்டியில் ராட்டர்டாமில் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த நகரத்தை சேர்ந்த ஃபேயர்ணுட் அணி, ரோமா அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் போது, ரோமா அணி வீரர் ஜெர்வின்ஹோவை நோக்கி ரசிகர் ஒருவர் வாழைப்பழம் போன்ற காற்றடிக்கப்பட்ட பலூனை வீசினார். இதனை ஜெர்வின்ஹோ கண்டு கொள்ளவில்லை.
இதே போல மாட்ரிட் நகரில் நடந்த ஸ்பானீஷ் லீக் கால்பந்து போட்டியின் போது, பார்சிலோனா அணி வீரர் டேனி ஏல்வியசை நோக்கி ரசிகர் ஒருவர் வாழைப்பழத்தை தூக்கி எறிந்தார்.
ஏல்வியஸ் கார்னர் அடிக்க வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இதற்காக அவர் அந்த ரசிகர் மீது கோபித்துக் கொள்ளவில்லை. மாறாக மைதானத்தில் கிடந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு கார்னர் அடிக்க கிளம்பி விட்டார்.
போட்டி முடிந்ததும் ஏல்வியஸ் கூறுகையில், அந்த ரசிகரின் நோக்கம் நான் வாழைப்பழம் சாப்பிட வேண்டுமென்பது தானே அதனை செய்து விட்டேன் என்று கூலாக தெரிவித்துள்ளார்.
|
0 comments:
Post a Comment