அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண தொடர் நடக்கிறது. இதில் கான்பெரோவில் இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
அதன் படி தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குயின்டன் (1) ஏமாற்றினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஆம்லா, டுபெலிசிஸ் இருவரும் நிதானமாக விளையாட ஆரம்பித்தனர்.
அயர்லாந்து பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இருவரும் சதம் அடித்தனர். அணியின் ஓட்டங்கள் 259 ஆக இருந்த போது டுபெலிசிஸ் ஆட்டமிழந்தார். இவர் 109 பந்துகளில் 109 ஓட்டங்கள் (10 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்தார்.
இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 247 ஓட்டங்கள் குவித்தது. மறுமுனையில் அதிரடி காட்டிய ஆம்லா 159 ஓட்டங்கள் (16 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அணித்தலைவர் டிவில்லியர் வழக்கம் போல் அதிரடி காட்டினார். 2 சிக்சர், 1 பவுண்டரி விளாசிய நிலையில், 17 பந்துகளில் 24 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து வந்த மில்லர் மற்றும் ரொஸ்ஒவ் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்டினர். மில்லர் 23 பந்தில் 46 ஓட்டங்களுடனும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ரொஸ்ஒவ் 30 பந்தில் 61 ஓட்டங்களுடனும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா வீரர்களின் அதிரடியால் 50 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 411 ஓட்டங்களை குவித்தது.
0 comments:
Post a Comment