முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் (வயது 70) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் (வயது 70) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படலாம் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் இன்று திங்கட்கிழமை உரையாற்றவிருக்கின்றார். அவர், தலைமையில் சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் அவரை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்து, நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவதற்கான யோசனையும் முன்வைக்கப்படவிருக்கின்றது.
இவ்வாறானதொரு நிலையில், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்சவை, நாடாளுமன்றுக்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிக்கு கூட்டமைப்புக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் அதிருப்தி கொண்டோர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருப்பதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே கட்சியின் தலைவராக நியமித்துள்ளதாக கொழும்பில் இன்று மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட குழுவினர் தெரிவித்தனர்.
அதேநேரம் கட்சியின் செயலாளராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளராக எஸ். பி. நாவின்ன, தேசிய அமைப்பாளராக ஜனக பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டிருப்பதோடு கட்சியின் ஆலோசகர்களாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment