ஒருநாள் போட்டிகளில் விளாசி தள்ளும் ரெய்னா தனது கடைசி 3 இன்னிங்ஸ்களில் ஓட்டங்கள் எதையும் எடுக்கவில்லை. ஹாட்ரிக் ‘டக்’ அவுட்கள் ஆகியுள்ளார்.
சிட்னியில் 2 இன்னிங்ஸ்களிலும் டக்-அவுட் ஆன ரெய்னா, இதற்கு முன்னர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், ஒவல் மைதானத்தில் (2011) இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக்- அவுட் ஆகியுள்ளார்.
7 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 5 முறை டக்- அவுட் ஆகியிருக்கிறார். மொகீந்தர் அமர்நாத்திற்குப் பிறகு டாப் இந்திய துடுப்பாட்டக்காரர் ஒருவர் டெஸ்ட் வாழ்வில் இருமுறை இரு இன்னிங்ஸ்களிலும் டக்-அவுட் ஆகியுள்ள வீரர் சுரேஷ் ரெய்னா.
அதே சமயம் டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக அவுஸ்திரேலியாவில் அதிக ஓட்டங்களை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை முரளி விஜய் பெற்றுள்ளார்.
சிட்னி 2வது இன்னிங்ஸில் 80 ஓட்டங்கள் எடுத்த விஜய் இந்தத் தொடரில் 482 ஓட்டங்களை 6.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஒரு தொடரில் இவரது சிறந்த ஓட்டங்கள் குவிப்பு இதுவாகும்.
இது தவிர அவுஸ்திரேலிய மண்ணில் ஒருசதம் 4 அரைசதங்களுடன் 5 அரைசதம் அல்லது அரைசதத்திற்கு கூடுதலான ஓட்டங்களை எடுத்தவர் என்ற விதத்திலும் புதிய இந்திய தொடக்க வீரருக்கான சாதனையை முரளி விஜய் நிகழ்த்தியுள்ளார்.
0 comments:
Post a Comment