↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பிறந்த தினம் இன்று…
இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகுல் சரத் டிராவிட் 11 ஜனவரி 1973 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் பிறந்தார்.
ராகுல் டிராவிட்டின் தந்தை வழி முன்னோர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த ஐயர்கள் ஆவர். அவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வளர்ந்தார்.
டிராவிட்டின் தந்தையார் ஜாம் மற்றும் ஊறுகாய்களை உற்பத்தி செய்யும் கிசான் என்னும் நிறுவனத்தில் வேலை செய்ததால், பெங்களூரை சேர்ந்த செயின்ட் ஜோசப் பாய்ஸ் ஹை பள்ளியை சேர்ந்த அவரது நண்பர்கள் அவரை "ஜாமி" என்று செல்லமாக அழைத்தனர்.
அவரது தாயார் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலையியல் பேராசிரியராக பணிபுரிந்தார். ராகுல் டிராவிட், கர்நாடகாவின் பெங்களூரில், செயின்ட் ஜோசப் காலேஜ் ஆப் காமெர்ஸ் இல் வணிகவியல் பட்டம் பெற்றார்.
பிறகு 4 மே 2003 ஆம் ஆண்டு அன்று அவர் நாக்பூரை சேர்ந்த Dr. விஜேதா பெண்தர்கர் என்ற அறுவை சிகிச்சை மருத்துவரை மணந்தார்.
டிராவிட் முதலில் ஆடிக்கொண்டு இருந்த விளையாட்டு ஹாக்கி. அதில் மாநில அணியில் இடம்பிடித்து இருந்தார். அதற்கு பிறகே கிரிக்கெட் மட்டையை முத்தமிட்டார்.
ஓயாத பயிற்சிதான் இவருடைய ஒரே சொத்து. இளவயதில் ஒரு குறிப்பிட்ட பந்தில் அவுட் ஆனதும் அதே திசையில் ஆயிரம் பந்துகளை அடித்து பயிற்சி செய்தவர்.
டிராவிட் ஒரு தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் இருந்தே பயிற்சி செய்ய தொடங்கி விடுவார். வியர்வை சொட்ட சொட்ட பயிற்சி செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமானது.
முக்கியமான பல இன்னிங்க்ஸில் டிராவிடின் ஆட்டம் கவனம் பெறமாலேயே போயிருக்கிறது. அன்வர் 194 அடித்த போட்டியில் டிராவிட் 107 ஓட்டங்கள் அடித்தார்.
2001 லக்‌ஷ்மன் கொல்கத்தாவில் 281 அடித்த பொழுது இவர் அடித்த 180, பாகிஸ்தான் உடன் தொடரில் சேவாக் 309 அடிக்க, ராவல் பிண்டியில் இவர் அடித்த 270 மறக்கப்பட்டுவிட்டது.
இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்திருக்கும் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை 2006 ஆம் ஆண்டிற்கு பின் அஸ்தமனம் ஆக தொடங்கியது.
2007 இல் நடந்த உலகக்கிண்ண தொடருக்கு இந்திய அணிக்கு தலைவராக நியமிக்கபட்டார். ஆனால் ஓட்டு மொத்த அணியும் சொதப்பி எடுக்க இந்தியா முதல் சுற்றோடு வெளிவந்தது.
இந்திய அணியின் மிக மோசமான உலகக்கிண்ண தொடராக அது அமைந்தது டிராவிட்டின் துரதிர்ஷ்டம். அதன் பின்னர் இந்திய அணி மாற்றி அமைக்கபட்டதில் டிராவிட் ஓரம் கட்டபட்டார்.
பின்னர் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு எடுக்கபடவே இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார்.
இதனையடுத்து தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்து 2012ம் ஆண்டு சாதனை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
”எப்போதுமே எல்லாவற்றையும் அணிக்கு தரும் வகையில் விளையாடுவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்துள்ளது. சில நேரங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை” என ஓய்வு பெற்றபொழுது சொன்னவர் டிராவிட்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top