ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்பாக்தாதி.
இவர் சமீபத்தில் அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில் இறந்ததாக செய்திகள் வெளியாகியன.
ஆனால் கடந்த மாதம் வீடியோ ஒன்றில் தோன்றிய அவர் இஸ்லாமிய அரசை விரிவாக்க வேண்டும் என்றும் சவுதி அரேபியா மீதான தாக்குதல்களுக்கு அதிகரிக்க வேண்டும் எனவும் ஜிகாதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் சிரியாவை கடக்க முயன்ற அல்பாக்தாதியின் மனைவி மற்றும் மகனை லெபனான் இராணுவம் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லெபனான் இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் கைது செய்தவர் பாக்தாதியின் மனைவியர்களில் ஒருவர் ஆவார் என்றும் ஆனால் தனது பெயர் மற்றும் தான் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை அவர் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லெபானானின் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அவர் தனது மகன்களுடன் போலி கடவுச்சீட்டுகளுடன் நாட்டை கடக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு உளவுத்துறையின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைக்கப்பட்ட அவர்களிடம், லெபனான் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment