↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
யாழ்.குடாநாட்டில் தொடரும் கனமழையினால் பொம்மைவெளி பகுதியை தொடர்ந்து காக்கைதீவு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் சுமார் 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி மாற்றிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காக்கைதீவு பகுதியில் பிறேமதாசா இலங்கையின் ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் குடியேற்றிய 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் அப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறி பொதுமண்டபங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழும் அந்த மக்களுக்கு எவ்விதமான உதவிகளும் வழங்கப்படுவது கிடையாது.

இந்நிலையில் இவ்வருடமும் மழையினால் 110 கு டும்பங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து மாற்றிடங்களுக்குச் சென்றுள்ளனர்.
எனினும் மாற்றிடங்களில் தங்கியிருக்கும் அவர்களுக்கு எவ்விதமான உதவிகளும் வழங்கப்படாதநிலையில் பல அசௌகரியங்களை சந்தித்துக் கொண்டிருப்பதுடன், இதனால் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 10 வருடங்களாக இந்த பகுதி மக்கள் தமக்கு மின்வசதி மற்றும் வீதி ஆகியவற்றை அமைத்து தாருங்கள் எனக்கேட்டும் அது தொடர்பில் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கூறியுள்ளனர்.

- See more at: http://www.tamilwin.net/show-RUmszCTWKZkt5.html#sthash.Q13okxxM.dpuf

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top