அமேசான் காட்டில் உள்ள பழங்குடியின தலைவரை, இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படக்கார பெண் ஒருவர் மணமுடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் குறும்பட இயக்குநராகவும், புகைப்படகாரராகவும் சாரா பேகம்(Sara Begum) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களை எதிர்த்து போராடி வரும் ஈக்வடார்(Equador) பகுதியின் அமேசான் காடுகளில் உள்ள பழங்குடியினரை பற்றி சாராவிற்கு தெரியவந்துள்ளது.
தானும் இவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என நினைத்த சாரா, சமீபத்தில் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பழங்குடி மொழியை கற்று தனது படக்குழுவினருடன் ஈக்வடாருக்குச் சென்றுள்ளார்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்த அவர், எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக தானும் இருப்பதைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார். இதனையடுத்து, தன்னை விட 30 வயது மூத்தவரான பழங்குடிகளின் தலைவரும் வீரருமான ஜின்க்டோவைத்(Ginkto) திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும், சாராவின் தலையில் இறக்கைகளால் ஆன மகுடம் சூட்டப்பட்டு, அமேசானின் ராணியாக அங்கிருந்த பழங்குடியின மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சாரா கூறுகையில்,
எனது கணவர் மிகவும் அருமையான மனிதர். நான் குடும்பம் நடத்துவதற்காக அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை.
அவர்களின் போராட்டத்துக்கு ஒரு வடிவம் கொடுக்கவும் வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்தவும் உதவியாக இருக்கவே திருமணம் செய்துகொண்டேன் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment