↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மைத்திரிபால சிறிசேன கட்சி தாவி பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டதனால் பேரிடியை சந்தித்துவரும் மஹிந்த அரசு அதன் பின்னரான ஏனையோரின் கட்சி தாவல்களினால் அதிர்ந்து போயிருக்கின்றது.

அத்துடன் மக்களின் செல்வாக்கும் வெகுவாக குறைந்துள்ள நிலையில் எப்படியாவது மூன்றாவது முறையும் ஜனாதிபதியாக வந்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி நிற்கும் மஹிந்த ராஜபக்ச தனது முழுமையான நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்திவருவது தற்போது கண்கூடாக தெரிகின்றது.

இதற்கு மகுடம் வைத்தது போல நேற்றைய தினம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற 6வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திலிருந்து எல்.ஈ.டி தொலைக்காட்சிகளில் ஆளுங்கட்சி விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

சில தினங்களுக்கு முன்னர் ஆளுங்கட்சி தேர்தல் பிரச்சாரங்களுக்காக இலங்கை கிரிக்கெட் சபையையும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூ சத்தம் பெற்ற மகிந்தவின் விளம்பரம்
கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியின் இடையில் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சித் திரையில் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார விளம்பரம் காட்ட போது மைதானத்தில் கூடியிருந்தவர்கள் பெரும் ஹூ சத்தமிட்டுள்ளனர்.

இந்த கிரிக்கெட் போட்டி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பட்ட கொண்டிருந்த போது நிகழ்ந்துள்ளது. மைதானத்தில் இருந்த தொலைக்காட்சித் திரையில் சுபிட்சமான எதிர்காலம் என மகிந்த ராஜபக்ஷவின் பிரசார விளம்பரம் காட்டப்பட்டது.

திரையில் காட்டப்பட்ட அந்த விளம்பரம் நீக்கப்படும் வரை பார்வையாளரகளின் ஹூ சத்தம் தொடர்ந்தது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top