↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அடிலெய்டு டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்திய அணியின் தற்காலிய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஆதரவு பெருகுகிறது.
அனுபவ அணித்தலைவரான டோனி காயத்தால் அவதிப்பட்டதால், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இளம் வீரர் கோஹ்லி தலைமையில் இந்தியா களமிறங்கியது.
கோஹ்லி இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். இது, இவரது துணிச்சலான செயல்பாட்டுக்கு உதாரணமாக அமைந்தது. வெற்றி நழுவினாலும் கோஹ்லி தலைமையிலான அணி கடைசி வரை போராடியது.
இதைத் தொடர்ந்து அறிமுக டெஸ்டில் அசத்திய கோஹ்லி முழுநேர அணித்தலைவராக தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது பற்றி அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் கூறுகையில், டோனியின் தலைமை பொறுப்பு மீது எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அணித்தலைவர் பதவிக்கு கோஹ்லியை மாற்ற தற்போது சிறப்பான நேரம் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கூறுகையில், அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி வீரர் கோஹ்லியின் செயல்பாட்டை பாராட்ட வேண்டும். இப்போட்டி முழுவதும் இவர் என் மனதை கவர்ந்தார்.
அதே நேரம், இப்போட்டியில் டோனியின் கடைசி கட்ட ‘பினிஷிங்கை’ இழந்துவிட்டோம். இவர் அணியின் ஓட்டங்களை எப்படி உயர்ந்த வேண்டும் என நன்கு அறிந்து வைத்திருப்பார். டோனி விளையாடியிருந்தால், போட்டியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்டிலே தற்காலிக அணித்தலைவராக செயல்பட்ட கோஹ்லி வெளிநாட்டு மண்ணில் சிறந்த ஒரு இன்னிங்ஸூடன், அணியையும் சிறப்பாக வழிநடத்தினார். முதல் இன்னிங்ஸில் தனது ‘ஹெல்மெட்டில்’ ஜான்சன் வீசிய ‘பவுன்சர்’ தாக்கிய பின்பும் துணிச்சலாக விளையாடி திறமையை நிரூபித்தார்.
போட்டியின் 4வது நாளில், எதிரணி வீரர்களுடன் வார்த்தை போரில் ஈடுபட்டார். இது ஒன்றுதான், இவரின் அணித்தலைவர் பதவிக்கு இடையூறாக உள்ளது. களத்தில் அவுஸ்திரேலிய வீரர்களுடன் மோதியதை பார்த்த போது, இவரால் அமைதியாக இருக்க முடியாதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது.
டோனியை பொறுத்தவரை, சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அசத்துவார். ஆனால் அந்நிய மண்ணில் சொதப்புகிறார்.
இந்தியாவில் விளையாடிய 30 போட்டிகளில் 21 வெற்றி, 6 ‘டிரா’, 3 தோல்விகளை பெற்றுள்ளார். ஆனால் வெளிநாடுகளில் நடந்த டெஸ்டில், 28 போட்டிகளுக்கு அணித்தலைவராக செயல்பட்ட இவரால், வெறும் 6ல் மட்டுமே வெற்றி தேடித் தர முடிந்தது.
14 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்த இவர், அந்நிய மண்ணில் நடந்த டெஸ்டில் அதிக தோல்விகளை பதிவு செய்த இந்திய அணித்தலைவர்கள் பட்டியலில் பட்டோடி (10 தோல்வி), அசார் (10), கங்குலி (10) ஆகியோரை முந்தி முதலிடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top