பிரித்தானியாவில் உள்ள லங்காஷயரில் இருக்கும் முஸ்லீம் பள்ளியில் ஆசிரியையாக இருந்தவர் ரித்வானா. அவர் இஸ்லாமிய சட்டத்தின்படி முஸ்லீம் சிறுமிகளுக்காக பிரத்யேகமான பொம்மையை வடிவமைத்துள்ளார்.
தீனி பொம்மை என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பொம்மையின் முகத்தில் கண், மூக்கு, வாய் என்று எந்த உறுப்பும் இல்லாமல் வெறுமையாக உள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்டு இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த பொம்மையின் விலை ரூ. 2 ஆயிரத்து 516 ஆகும்.
இது குறித்து ரித்வானா கூறுகையில், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் முகத்தில் கண், மூக்கு, வாய் உள்ள பொம்மைகளை பயன்படுத்துவது குறித்து கவலை தெரிவித்தனர்.
இதனால் தான், நான் இந்த பொம்மையை வடிவமைத்தேன். சில பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் அறையில் இரவில் பொம்மையை வைக்க மாட்டார்கள். ஏனென்றால் அறையில் கண்கள் உள்ள பொம்மைகள் இருக்கக் கூடாது. இஸ்லாமிய சட்டப்படி முகத்தை படமாக வரைவது, சிற்பம் செதுக்குவது கூடாது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment