ஏடிஎம் காவலாளியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியது எப்படி என்பது குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார் குற்றவாளி வேல்முருகன். |
புளியந்தோப்பு வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராவ் என்ற விஜயகுமார்(வயது 30). பட்டதாரியான அவர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 10ம் திகதி வெளியூர் சென்றிருந்த அவர், விருத்தாச்சலம் அருகே பாசிக்குளம் என்ற கிராமத்தின் வெள்ளைப் பாறை ஓடை அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் வேல்முருகன் என்ற நபர் கைது செய்யப்பட்டார், அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் 10ம் வகுப்புவரை படித்து விட்டு, எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தேன். எனது தந்தை காவலாளியாக வேலை பார்த்த அதே நிறுவனத்தில் தான், வெங்கட்ராவும் வேலை பார்த்தான். அந்த வேலையில் குறைவான சம்பளம் கிடைத்ததால், நல்ல அரசு வேலையில் சேர வேண்டும் என வெங்கட்ராவ் நினைத்தான். இதனை எனது தந்தையிடம் தெரிவிக்கவே அவரும் எனது மகனுக்கு தெரிந்த நபர்கள் நிறையபேர் உள்ளனர், அவர்கள் மூலம் வெங்கட்ராவுக்கு வேலை வாங்கி தருவதாக சொன்னார். வெங்கட்ராவ் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை சந்தித்து பேசினான். நானும் சென்னை விமானநிலையத்தில் தெரிந்த நபர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மூலம் விமானநிலையத்தில் நல்ல வேலை வாங்கித்தருவதாக சொன்னேன். இதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்றேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக வெங்கட்ராவ் தெரிவித்தான். எனக்கு ரூ.1 லட்சம் வரை கடன் இருந்தது. அந்த கடனை, வெங்கட்ராவ் தரும் பணத்தில் அடைத்து விட முடிவு செய்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு, லாட்ஜில் வைத்து வெங்கட்ராவை கொலை செய்ய முடிவு செய்தேன். கொலை திட்டப்படி 3 சூட்கேசுகளை பர்மாபஜார் மற்றும் தியாகராயநகரில் வாங்கினேன். பிளாஸ்டிக் பைகளையும் அங்குதான் வாங்கினேன். கொலை செய்ய இரும்பு பைப், உடலை கூறு போட அரிவாள் ஆகியவற்றையும் வாங்கி ரெடியாக வைத்திருந்தேன். திட்டப்படி 10ம் திகதி இரவு மல்லிகா லாட்ஜிக்கு வந்து, நான் தயார் நிலையில் காத்திருந்தேன். இரவு 10 மணி அளவில் வெங்கட்ராவ் வந்தான். அறைக்குள் சென்றதும், எவ்வளவு பணம் கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவன், நீங்கள் சொன்ன முக்கியமான ஆள் எங்கே? வேலைக்கான ஆர்டரை கொடுத்தால்தான் பணத்தை தருவேன் என்று கூறினான். முக்கியநபர் வந்து விடுவார், எவ்வளவு பணம் கொண்டு வந்திருக்கிறாய் என்று மீண்டும் கேட்டேன். அவன் கையில் ஒரு பை இருந்தது. அந்த பைக்குள் பணம் இருப்பதாக மட்டுமே சொன்னான். இரவு 11 மணி ஆனதும், எனக்கு தூக்கம் வருகிறது, முக்கிய நபர் எப்போது வருவார் என்று கேட்டான். தூக்கம் வந்தால் தூங்கு, முக்கிய பிரமுகர் வந்தவுடன் எழுப்புகிறேன் என்றேன். உடனே வெங்கட்ராவ் தூங்க ஆரம்பித்து விட்டான். சற்று நேரத்தில் நான் தயாராக கொண்டுவந்திருந்த இரும்பு பைப்பால் வெங்கட்ராவ் முகத்தில் அடித்தேன். அவன் முகம் சிதைந்து மயக்கமாகி விட்டான். அவன் தூங்கிய தலையணை உறையில் ரத்தம் வடிந்தது. வெங்கட்ராவை கழிவறைக்குள் இழுத்துச் சென்று துண்டு துண்டாக வெட்டி, தண்ணீரால் கழுவினேன். பின்னர் உடல் பாகங்களை பிளாஸ்டிக்பைக்குள் திணித்து, சூட்கேசுக்குள் திணித்தேன். இந்த வேலை முடியும்போது அதிகாலை 4 மணி ஆகி விட்டது. லாட்ஜின் வரவேற்பறையில் இருந்த ஊழியரிடம், நான் மலேசியா செல்ல விமான நிலையம் போக வேண்டும், என்னுடன் வந்த நண்பர் அறையில் தூங்குகிறார், அவர் காலையில் எழுந்து சென்று விடுவார் என்று தெரிவித்தேன். வெளியில் வந்து ஆட்டோ பிடித்து, சூட்கேசுகளை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றினேன், விமானநிலையம் வந்தவுடன் சிறிது நேரம் காத்திருந்து விட்டு வாடகை காரை ஏற்பாடு செய்து விருத்தாச்சலம் சென்றேன். விருத்தாச்சலம் வழியாக எனது சொந்த ஊரான பாசிகுளம் காட்டுப்பகுதிக்கு சென்றேன், பின்னர் காரில் இருந்து இறங்கிவிட்டு சூட்கேசுகளை பாறைகள் நிறைந்த பகுதியில் வீசிவிட்டு மீண்டும் பஸ் பிடித்து சென்னை வந்து விட்டேன். வெங்கட்ராவ் வைத்திருந்த பையில் ரூ.10 லட்சம் பணம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அதில் ரூ.1 லட்சம்தான் இருந்தது. அதிலிருந்து எனது ரூ.50 ஆயிரம் கடனை அடைத்துவிட்டேன், வெங்கட்ராவின் செல்போன் மற்றும் மல்லிகா லாட்ஜ் அறையின் தலையணை என்னை காட்டிக் கொடுத்து விட்டது, இல்லையென்றால் என்னை பொலிசாரால் நிச்சயம் கைது செய்திருக்க முடியாது என தெரிவித்துள்ளார். |
உடலை துண்டு துண்டாக வெட்டியது எப்படி? குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment