இவ்விரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடந்தது. இதன் 4வது நாள் ஆட்டத்தின் போது வீரர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வருண் ஆரோனின் பந்தில் வார்னர் விக்கெட் ஆன போது அது தவறான பந்து என்று அறிவிக்கப்பட்டது. அப்போது வார்னருக்கும், தவானுக்கும் இடையே ஆடுகளத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல மற்றொரு சம்பவத்தில் அவுஸ்திரேலிய வீரர் சுமித்துடன் தற்காலிக அணித்தலைவர் விராட் கோஹ்லி மோதலில் ஈடுபட்டார். எல்.பி.டபிள்யூ முறையீடு தொடர்பாக அவரை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த 3 வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதியை மீறியதாக, லெவல் 1 விதி 201.8ன் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.அதனால் இந்த 3 பேருக்கும் அபராதம் விதித்து ஐ.சி.சி. நடவடிக்கையை எடுத்துள்ளது.
வார்னருக்கு 15 சதவீதமும், விராட் கோஹ்லி, தவானுக்கு தலா 30 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment