↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பலருக்கும் முதுகுவலி தீராத பிரச்னையாக இருக்கும்.
அலுவலகத்தில் வெகு நேரம் கணனி முன் அசையாமல் அமர்ந்திருப்பது, உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, அமருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை போன்ற பல பிரச்னைகள் முதுகுவலிக்கு காரணமாக அமைகின்றன.
இதுவரை உங்களுக்கு இந்த பிரச்னை இல்லாமல் இருக்கலாம். இதை வரவழைத்து கொள்வதும், தடுப்பதும் நம்மை பொறுத்து தான் உள்ளது.
வேலையின் போது சில விடயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்னையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம்.
வைட்டமின்கள்
கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை. உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம்.
வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. இதை தவற வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லவை பெற்றவையாகும்.
தாதுக்கள்
எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்பு சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன் தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.
உடற்பயிற்சி
சிறிய உடற்பயிற்சிகள் முதுகு வலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொடவேண்டும். 20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும்.
நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம். கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும்.
உட்காரும் தோரணை
அலுவலகத்திலோ, வீட்டில் சகஜமாக டி.வி பார்க்கும் போதோ உட்காரும் நிலையில் அதிக விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலும் அமர வேண்டும்.
இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும்.
இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ளவேண்டும்.
உணவு முறை
சாப்பிடும் உணவு முறையிலும் அக்கறை கொள்ளுங்கள். பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள்.
கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.
சப்ளிமென்ட்ஸ்
நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள். பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.
சூடான குளியல்
வலிமிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுபடுவது நல்லது. இது உற்சாகத்தையும் தரும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top