புற்றுநோய்க்கு சிகிச்சை பெறாமல் குழந்தையை காப்பாற்ற சீனப்பெண் ஒருவர் தனது உயிரை விட்டுள்ளார்.
சீனாவின் ஹெனாள் மாகாணத்தில் உள்ள ஷெங்ஷு பகுதியை சேர்ந்தவர் குயூ யுயான்யுயான் (26).
இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கர்ப்பம் அடைந்த போது அவரை புற்று நோய் தாக்கியது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அவருக்கு ‘கீமோ தெரபி’ சிகிச்சை பெற மருத்துவர்கள் வற்புறுத்தினர்.
அந்த சிகிச்சை பெற்றால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என கருதிய அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையே அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
அதன் பின்னர் அவர் சிகிச்சை பெற்றார். இருந்தும் குழந்தை பிறந்த 100–வது நாளில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இத்தகவல் அறிந்த சீன மக்கள், அவரது தாய்ப்பாசத்தை வெகுவாக புகழ்ந்து அவரது மகன் நீடூடி வாழ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment