சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் லிங்கா படம் கடந்த டிச.12ம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3000 திரையரங்குகளில் வெளியானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 720 திரையரங்குகளில் லிங்கா திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல் நாளில் 52 கோடியும், இரண்டாவது நாளில் 27 கோடியும், மூன்றாவது நாள் 24 கோடியும் வசூல் செய்திருப்பாக லிங்கா தயாரிப்பு நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக இணையங்களில் செய்திகள் பரவிவருகின்றன. தற்போது 100 கோடி வசூல் என்று உலாவி வரும் செய்திகளுக்கு லிங்கா தயாரிப்பு நிறுவனம் இது வரை மறுப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பு 100கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட எந்திரன், கத்தி படம் இந்த தொகையை வசூலிக்க அதிக நாட்கள் ஆன நிலையில் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் லிங்கா படம் வசூலித்து எப்படி என்ற பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்படுகிறது.
இது பற்றி விசாரித்த போது தான் காரணம் என்னவென்று தெரிந்தது. அதாவது, டிக்கெட் விலை தமிழகத்தில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தைவிட பன்மடங்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.1000க்கும் மேல் முதல் நாள் டிக்கெட் கட்டணம் இருந்தாக பலர் தெரிவித்தனர். இதே போல் தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும், 500 ரூபாய்க்கும் மேல் டிக்கெட் கட்டணம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் ரசிகர்கள் ஷோ என்ற பெயரில் கடந்த 3 நாட்களில் அதிக ஷோ ஓட்டப்பட்டு டிக்கெட் கட்டணமும் பன்மடங்கு வசூலிக்கப்ட்டது. இவ்வளவு அதிகமான தொகைக்கு விற்கப்பட்டதற்கு தியேட்டர்காரர்களின் பேராசை மட்டுமின்றி பெரும் விலைகொடுத்து லிங்காவை அவர்கள் வாங்கியதும்தான் காரணம் என்கிறார்கள் படத்துறை சேர்ந்தவர்கள்.
தணிக்கை துறை லிங்கா படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில். அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணம், தமிழகத்தில் எங்குமே வசூலிக்கப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. உயர்நீதிமன்ற உத்தரவு, மீறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment