ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது விளம்பரத்துக்காகத்தான் என்று பேசுமாறு கூறிய தொலைக்காட்சிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் எஸ்வி சேகர். லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி முதல்வராகி தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இயக்குநர் அமீர் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அதற்கு பதிலளித்த ரஜினி, சூழ்நிலை அப்படி அமைந்தால் நான் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என்று பதிலளித்தார்.
இது தமிழக அரசியல் மற்றும் மீடியா வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. கடந்த மூன்று தினங்களாக இதுதான் பேசுபொருள் என்றாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன. ஒரு தொலைக்காட்சியில் ரஜினி அரசியலுக்கு வருவதாகக் கூறியது விளம்பரத்துக்காகவா என்ற தலைப்பில் விவாதம். இதில் பேச வருமாறு நடிகர் எஸ்வி சேகரை அழைத்துள்ளனர். அவரும் சம்மதம் சொல்ல நினைத்த கணத்தில், அடுத்து ஒரு கண்டிஷன் போட்டார்களாம் தொலைக்காட்சிக்காரர்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்பது வெறும் விளம்பரத்துக்காகத்தான் என்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்றார்களாம். உடனே மறுப்பு தெரிவித்த சேகர், அதுக்கு வேற ஆளைப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து எஸ்வி சேகர் கூறியுள்ளதாவது: ஒரு தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பேசியது விளம்பரத்துக்காகவா என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தார்கள். உடனடியாக விளம்பரத்துக்காகத்தான் என்றே பேச வேண்டும் என்றும் சொன்னார்கள். அதுக்கு உங்ககிட்ட சம்பளம் வாங்கற ANCHOR ஐ பேசச் சொல்லுங்க. நான் என் கருத்தைத் தான் சொல்லமுடியும். அதனால் வரமுடியாது என சொல்லி விட்டேன்."
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment