இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கி வரும் படம் ‘பிசாசு’. இந்தப் படத்தில் கதாநாயகனாக நாகா நடிக்க, நாயகியாக நடித்திருக்கிறார் பிரயாகா.
படத்திற்கு ஒளிப்பதிவு ரவிராய் செய்ய, இசையமைத்திருக்கிறார் அரோல் கொரிலி. தமிழச்சி தங்கபாண்டியன் பாடல் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் ஒரேயொரு பாடல்தான் உள்ளதாம். அந்தப் பாடலை எழுதி கோடம்பாக்கத்தில் புதிய கவிஞராக அறிமுகமாகியுள்ளார் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன். கோபிநாத் எடிட்டிங் செய்திருக்கிறார். நேதன் லீ சண்டை பயிற்சியை கையாண்டிருக்கிறார்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பாலா, மிஷ்கின் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.
விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, “இந்தப் படம் பேய் படம்தான்னாலும், நீங்கள் இதுவரைக்கும் பார்த்த பேய் படங்களைவிட அதிகம் வித்தியாசங்கள் உண்டு. இதுலேயும் மந்திரவாதிகளெல்லாம் இருக்காங்க. வருவாங்க. ஆனா அது வேற மாதிரியான சிச்சுவேஷனா இருக்கும். படத்தோட மையக் கருத்தை சொல்லிட்டேன்னா படமே தெரிஞ்ச மாதிரி ஆயிரும். படம் பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்.
“படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நாகா 4 மாதங்கள் என் அலுவலகத்திலேயே தங்கி இருந்து கஷ்டப்பட்டு அந்த கேரக்டராக உருமாறி அற்புதமாக நடித்துள்ளான்.
“கதாநாயகியாக நடித்துள்ள பிரயாகாவும் கடினமாக உழைத்துள்ளார். படத்தில் அவரின் உண்மையான முகம் வருவது கொஞ்ச நேரம் தான். பெரும்பாலான நேரங்களில் அவர் பிசாசாகத்தான் வருகிறார். பல காட்சிகளில் அவரை அறுபது, எழுபதடி உயரத்தில் கிரேனில் கட்டி அந்தரத்தில் தூக்குவோம். அதை பார்த்து அவரது அப்பா அம்மா கதறி அழுவார்கள். ஆனால் நான் அவர்கள் பக்கம் திரும்பினால் எங்கே, என் மனது இளகிவிடுமோ என்று அவர்கள் பக்கமே திரும்ப மாட்டேன். அப்படி கஷ்டப்படுத்தியதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்திற்குப்பின் பிரயாகாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என்று கூறினார்.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment