கொடூரமான தீவிரவாத இயக்கமாக வலுப்பெற்று ஈராக், சிரியாவை வாட்டி வதைத்து வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தனது பலத்தை மேலும் மேலும் பெருக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேலும் தங்களது அமைப்பில் பெண்களின் பங்கையும் அது அதிகரித்து வருகிறது. ஆனால் பெண்களை போர்க்களத்தில் இறக்காமல், சமையல் வேலை செய்வது, எதிரிகளை மடக்க அவர்களின் அழகையும், உடலையும் பயன்படுத்துவது, புலனாய்வு தகவல்களைச் சேகரிக்க வைப்பது உள்ளிட்டவற்றுக்காக அவர்கள் பெண்களைப் பயன்படுத்தி வருகின்றனராம்.
ஒரு தீவிரவாத அமைப்பு போல இல்லாமல், வலிமை வாய்ந்த ராணுவம் போல தனது அமைப்பை அது உருவாக்க முயல்வதாகவும் தெரிகிறது. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சில பெண்கள் பிடிபட்டனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர முயன்று ஈராக் வரை போய் வந்தவர்கள் ஆவர்.
இவர்களை மீட்டு, கவுன்சிலிங் கொடுத்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இவர்களிடமிருந்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன. பெண்களை எப்படியெல்லாம் ஐஎஸ்ஐஎஸ் பயன்படுத்துகிறது என்பதும் இதிலிருந்து தெரிய வந்தது. அவை திடுக்கிட வைப்பதாக உள்ளன.
எங்களுக்கு பல தரப்பட்ட பணிகளும் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்று சமையல் வேலை செய்வது. போர்க்களத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையானதை நாங்கள் சமைத்துத் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டோம்.
இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், போர்க்களத்தில் போரிடும் நடவடிக்கைகளில் பெண்களைப் பயன்படுத்துவதை ஐஎஸ்ஐஎஸ் விரும்பவில்லை.
எங்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளின்போது, இது நீண்ட காலப் போராக இருக்கும். நீண்ட காலம் போரிடும் நிலை ஏற்படும். அதனால் போரிடும் வீரர்களுக்கு உதவியாக நீங்கள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
எங்களுக்கு பல தரப்பட்ட பணிகளும் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்று சமையல் வேலை செய்வது. போர்க்களத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையானதை நாங்கள் சமைத்துத் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டோம்.
இன்னொரு முக்கியமான உத்தரவு என்னவென்றால் தேவைப்பட்டால் எதிரிகளை மயக்கி வீழ்த்த உங்களது உடலையும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அவர்களுக்கு ஆசை காட்டி வலையில் வீழ்த்த வேண்டியிருக்கும் என்றும் நாங்கள் ஈராக்குக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் எங்களுக்கு புலனாய்வுத் தகவல்களை எப்படி சேகரிப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது உங்களை ஆயுதப் போரில் ஈடுபடுத்த மாட்டோம் என்று எங்களுக்குத் தெரிவித்தனர். நேரடிப் போரில் உங்களை ஈடுபடுத்த மாட்டோம் என்றும் கூறினர்.
நாங்கள் அங்கு போரிடும் எங்களது சகோதரர்களுக்கு உதவ நினைத்துத்தான் போனோம். ஆனால் அங்கு ஐஎஸ்ஐஎஸ்ஸின் திட்டம், நோக்கம் வேறாக உள்ளது. அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. தற்போது எங்களைப் போல அங்கு போரிடப் போயுள்ள நமது நாட்டு சகோதரர்களின் நிலை எங்களுக்குக் கவலை தருகிறது. அவர்களும் மீட்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இவர்கள் தவிர தேசிய புலனாய்வு அமைப்பும் ஐஎஸ்ஐஎஸ் குறித்து பல தகவல்களைச் சேகரித்துள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது ஒரு முழுமையான ராணுவமாக மாற அந்தத் தீவிரவாத அமைப்பு முயற்சித்து வருவது தெரிகிறது.
இந்தியா என்றில்லாமல் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் இந்த அமைப்பு ஆட்களைத் தேர்வு செய்து வருகிறது. குறிப்பாக தனது படையில் பெண்களை அதிக அளவில் சேர்த்து அவர்களை “சப்போர்ட்டிங்” என்ற வகையில் வைத்திருக்க இவர்கள் திட்டமிடுகிறார்கள்.
தங்களது முகாம்களில் நர்ஸ் வேலை பார்ப்பதற்கும், சமையல் வேலைகளைச் செய்வதற்கும், துணிகளைத் துவைப்பதற்கும், வீரர்களை மகிழ்விப்பதற்கும் பெண்களைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிடுகின்றனர். மேலும் எதிரிகளை ஆசை காட்டி வலை விரித்து வீழ்த்தவும் பெண்களை இவர்கள் honey traps போல பயன்படுத்துகின்றனர். உளவுத் தகவல்களை சேகரிக்கவும் பெண்களை வைத்து சாதிக்க முயல்கின்றனர்.
முன்பு பெண்களை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையுடன் இருந்து வந்தது ஐஎஸ்ஐஎஸ். ஆனால் அதில் இப்போது மாற்றம் தெரிகிறது. தனிநாட்டை அறிவித்த பின்னர் பெண்களையும் இவர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த பல பெண்கள் சிக்கி ஐஎஸ்ஐஎஸ் பக்கம் ஈர்க்கப்படுவது இந்திய புலனாய்வு அமைப்புகளை கவலைப்படுத்தியுள்ளது. மேலும் மேலும் பெண்கள் இதில் சேராமல் தடுக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.
0 comments:
Post a Comment