இன்று மதியம் திருச்சியில் நடிகர் சரத்குமார் நடிகர் சங்கம் மற்றும் நடிகர் விஷாலை பற்றி அளித்த பேட்டியை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகர் விஷால் பரபரப்பு அறிக்கையொன்றை இப்போது வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் விஷால் தன் அறிக்கையில் சொல்லியிருப்பது இது :
“நடிகர் சங்கத்தின் தலைவரான சரத்குமாரின் தெளிவற்ற, போலித்தனமான பேச்சுக்களைக் கேட்டு நான் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளேன்.
நடிகர் சங்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்கள் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.. நான் தவறு செய்திருப்பதாக அவர்கள் நினைத்து நடிகர் சங்கத்திலிருந்து நான் நீக்கப்பட்டால் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் அதற்கு முன்பாக சங்கத்திற்கு விரோதமாக நான் என்ன பேசினேன் என்பதை சரத்குமார் சொல்ல வேண்டும்.
செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் கே.என்.காளையும் பேசிய பேச்சு ஒரு நடிகராக நிஜமாகவே என் மனதைக் காயப்படுத்தியிருக்கிறது. மேடையில் பேசக் கூடாத அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்தி சக நடிகர்களை ‘நாய்’ என்று அவர்கள் பேசிய விதம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
சங்கத்தின் விதி எண் 13-ன் படி எந்தவொரு உறுப்பினரும் சக உறுப்பினரை பற்றி அவதூறாகவோ, மனம் புண்படும்படியும் பேசினால் அந்த உறுப்பினரை தண்டிக்க சங்கத்திற்கு அனுமதியுண்டு.
நடிகர் குமரிமுத்துவைகூட இதே சட்ட விதியின்படிதான் இந்தச் சங்கம் நீக்கியது. இதேபோலத்தான் ராதாரவியும், காளையும் பேசியிருக்கிறார்கள். இவர்கள் மீதும் சங்கம் இதே போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமே..
சங்கத்தின் சட்டப்படி சங்கத்தில் அனைவருக்கும் ஒரே நீதியெனில், நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் கே.என்.காளையும் சங்கத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டியவர்கள்தான்..!”
இவ்வாறு விஷால் தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment