பழம்பெரும் இயக்குனர், வசனகர்த்தா வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு, கெளரம், ஜஸ்டிஸ் கோபிநாத், ஞானப்பறவை போன்ற பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர். இவர் ஒருசில படங்களை இயக்கவும் செய்துள்ளார். மேலும் அப்பு, கண்ணாமூச்சி ஏனடா, கோகுலம் போன்ற படங்களில் குணசித்திர வேடத்தில் இவர் நடித்துள்ளார்.
சமீபகாலமாக தொலைகாட்சி சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது மீண்டும் பெரிய திரையில் நடிக்கவுள்ளார். அதுவும் வில்லனாக, பேட்டை ரவுடியாக நடிக்கின்றாராம்.
வியட்நாம் வீடு சுந்தரம் பேட்டை ரவுடியாக ரீ எண்ட்ரி ஆகவிருக்கும் திரைப்படம் 'வந்தா மல'. இகோர் என்பவர் இயக்கும் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வயதான பேட்டை ரவுடி வேடத்தில் இவர் மிகப் பொருத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும்போது தனக்கு நாகேஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'காதலிக்க நேரமில்லை' படம்தான் ஞாபகம் வந்ததாகவும், அந்த படம் போலவே ஒரு முழுநீள காமெடி கலந்த ஜாலியாக படமாக 'வந்தா மல' படம் அமைந்துள்ளதாகவும் வியட்நாம் வீடு சுந்தரம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment