தமிழில் அறிமுகமாகி சரியான இடம் கிடைக்காமல் தெலுங்கு சினிமாவில் நடிக்க சென்றவர் நடிகை இலியானா, டோலிவுட்டில் அவர் நடித்த பல
படங்கள் சூப்பர் ஹிட்டாகி விரைவிலேயே தெலுங்கு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்தார், அதன்பின் தற்போது நான் பாலிவுட்டுக்கு போறேன் என்று கிளம்பி அங்கே அவர் நடித்த பார்ஃபி திரைப்படம் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை மட்டுமே கொடுத்தது, அதன்பின் இவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லையென்றதும் கவர்ச்சி நாயகியாகவும் நடிக்க தயார் என்று அறிக்கைவிட்டும் பிரயோசனம் இல்லாமல் போனது.
மீண்டும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்த வந்த இவருக்கு எந்த திசை திரும்பினாலும் காஜல், சமந்தா என பெயர் அடிப்பட்டுக் கொண்டேயிருக்க தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம். சமீபத்தில் ஒரு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் இலியானாவிடம் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட வேண்டுமென்று கேட்டுள்ளார், இதற்கு சம்மதம் தெரிவித்ததோடு அந்த ஒரு பாடலுக்கு பெரிய தொகையையும் பெற்றுக் கொண்டுள்ளாராம். மீண்டும் டோலிவுட்டில் வலம்வர வேண்டுமானால் இந்த ஒரு வழியை உபயோகித்து மறுபடியும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கிறாராம் அம்மணி
0 comments:
Post a Comment