‘ஐ’ படம் சென்னை தியேட்டர் லிஸ்ட்டோடு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளதால், ‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு வருமா வராதா என்ற குழப்பம் ‘தல’ ரசிகர்களிடத்தில் இருந்து வந்தது. கவலையில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் விருந்து கொடுக்கவிருக்கிறார்கள் ‘என்னை அறிந்தால்’ படக்குழுவினர். தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுவரை எந்த தமிழ்ப்படமும் செய்யாத ஒரு புது முயற்சியை ‘என்னை அறிந்தால்...’ படத்தின் பாடல்கள் வெளியீட்டில் செய்யவிருக்கிறார்கள்.
அதாவது, தமிழ் சினிமாவில் ‘சிங்கிள் டிராக்’ என்ற கலாச்சாரத்தை ‘வானம்’ படத்தில் வந்த ‘எவன்டி உன்ன பெத்தான்’ பாடல் மூலம் சிம்புவும், யுவன் ஷங்கர் ராஜாவும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். (இதற்கு முன்பே கேசட் ரூபத்தில் ‘லேசா.. லேசா...’ என்ற ஒரு பாடல் மட்டும் தனியாக வெளிவந்திருக்கிறது) அதன்பிறகு அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தில் ‘விளையாடு மங்காத்தா’ மூலம் சிங்கிள் டிராக் கலாச்சாரம் தொடர்ந்தது. இப்போது பெரும்பாலான படங்கள் இந்த முறையைத்தான் பின்பற்றி வருகிறார்கள்.
இந்த ‘சிங்கிள் டிராக்’ விஷயத்தையே வேறு மாதிரியாக கையாளவிருக்கிறது ‘என்னை அறிந்தால்’ டீம். இப்படத்திற்காக ஹாரிஸின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் 6 பாடல்களை வாரம் ஒரு பாடலாக, ஒவ்வொரு வாரமும் வெளியிடவிருக்கிறார்கள். வரும் டிசம்பர் 5ஆம் தேதி டீஸர் வெளியீட்டோடு தொடங்கும் இந்த ‘ஒவ்வொரு வாரம் ஒரு டிராக்’ விருந்து டிசம்பர் 12, 19, 26, ஜனவரி 2ஆம் தேதி வரை மொத்தம் 5 பாடல்களை வெளியிடவிருக்கிறார்கள். பின்னர் அஜித், அருண் விஜய் பங்குபெறும் குத்துப்பாடலான ‘அதாரு... உதாரு...’ பாடலை மட்டும் பொங்கலுக்கு படம் ரிலீஸாகும்போது திரையரங்குகளில் நேரடியாக பார்க்கும்படி செய்யவிருக்கிறார்களாம்.
இந்தத் தகவல் ‘என்னை அறிந்தால்’ படக்குழுவிலிருக்கும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் நமக்கு லேட்டஸ்டாக கிடைத்தது. அதோடு படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது 100% உறுதி என்றும் கூறினார்கள்.

0 comments:
Post a Comment