தமிழ் சினிமா என்றாலே மிகவும் நாகரீகமாக ஹீரோயின்களை நடத்துவார்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்ட காலம் அது. கோலிவுட்டில் புதியதாக ஒரு கவர்ச்சி புயல் அடித்தது. ஆந்திராவில் வறுமையில் வாடும் ஒரு நடுத்தர குடும்பத்தில் விஜயலட்சுமி 1960ம் ஆண்டு பிறந்தார்.
பின் முன்னணி கதாநாயகி ஒருவரிடம் டச்சப் கேர்ளாக பணிபுரிந்த இவர் தன் வசியம் செய்யும் கண்ணை வைத்து பலரையும் சுண்டி இழுக்க, அதில் இயக்குனர்+ நடிகர் வினுசக்ரவர்த்தி விழுந்தார்.
தன் அடுத்த படத்தில் நடிக்கவைத்தால் இவரை தான் நடிக்க வைக்கவேண்டும் என்று பல எதிர்ப்புகளையும் தாண்டி நடிக்க வைத்தார்.
தன் இயக்குனர் விஜயன் இயக்கத்தில், வினுசக்ரவர்த்தி கதை வசனத்தில் வண்டிசக்கரம் என்ற படத்தில் சில்க்காக அரங்கேற்றம் செய்தார்.
இதன் பிறகு இவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதில் மிகவும் குறிப்பிடபட வேண்டிய படங்கள் அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை, சகல கலா வல்லவன், மூன்று முகம்,லக்கி மேன் போன்றவை.
இவரது கவர்ச்சி கடலில் தமிழகமே தத்தளித்து கொண்டிருந்தது. ரஜினி, கமல் போன்ற உச்ச கலைஞர்களுக்கு கூட அவர்கள் படங்களின் வெற்றிக்கு சில்க் தான் தேவைப்பட்டார். அவர் ஒரு பாடலில் ஆடினாலே போதும் தயாரிப்பாளர் வீட்டின் ஓட்டை உடைத்து கொண்டு பணம் கொட்ட ஆரம்பித்துவிடும்.
ஆனால், அதே அழகும் கவர்ச்சி தான் சில்க்கின் முடிவை தேடித்தந்தது. அவருக்கு ஏற்பட்ட வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளால் அவரே தூக்கு போட்டுக்கொண்டு இறந்தார். யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு வித்யா பலான் நடித்த டர்ட்டி பிக்சர் அவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது.
ஒரு நடிகையாக அவர் எத்தனை உச்சத்தை தொட்டாலும், ஒரு பெண்ணாக தன் சொந்த வாழ்வில் மிகவும் சங்கடத்தை சந்தித்தவர் தான் இந்த சில்க்.
0 comments:
Post a Comment