தான் எதிர்பார்த்தது போன்ற தோற்றத்தில் இல்லை எனக் கூறி மணமான அன்றே தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் சவுதியில் ஒரு கணவர். சவுதி அரேபியாவின் மதினா நகரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. பெற்றோர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த திருமணத்தில், முன்னதாக மணமகனும், மணமகளும் புகைப்படத்தில் கூட பார்த்துக் கொள்ளவில்லையாம். இந்நிலையில், திருமண நாளன்று மணமகள் போட்டோ எடுப்பதற்காக தனது முகத்திரையை விலக்கி உள்ளார். அப்போது மணமகளின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகன், ‘நான் மனதில் கற்பனை செய்து வைத்திருந்த பெண் போன்று, மணமகள் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மனதிற்குப் பிடிக்காத உன்னுடன் வாழ முடியாது. எனவே உன்னை விவாகரத்து செய்கிறேன் என்றும் கூறி விட்டார் அந்த மாப்பிள்ளை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கதறி அழுதார். மணமகனின் இந்த அதிரடி முடிவைக் கேட்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண வீட்டில் நிலவிய சந்தோஷ சூழல் மாறி, அனைவரையும் சோகம் குடி கொண்டது. பெரியவர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், மணமகன் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்த சம்பவம் குறித்து இணைய தளங்களில் செய்தி வெளியானது. அதைப்பார்த்து பலர் மணமகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அழகு என்பது முகத்தில் இல்லை, மனதில் தான் உள்ளது என்றும், அவசரப்பட்டு முடிவெடுத்த மணமகன் நிச்சயம் சுயநலவாதியாக, நோயாளியாக இருக்க வேண்டும் என்றும் விமர்சித்து வருகின்றனர். மேலும் மணமகன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது, அறிவற்ற செயல் என்றும் விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. சவுதி நாட்டு வழக்கப்படி திருமணத்திற்கு முன்பு மணமகனும், மணமகளும் நேரில் பார்க்கவோ, பேசவோ கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment