↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டு தான் வாழ்வதாகவும், என்.டி.ஆர் இறப்பினைக் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மறைந்த முன்னாள் நடிகரான என்.டி.ராமராவின் முன்னாள் மனைவியான லட்சுமி சிவபார்வதி கோரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சம்சாபாத் விமான நிலையத்தின் உள்நாட்டு விமான நிலைய முனையத் துக்கு ராஜீவ்காந்தி பெயரை மாற்றி என்.டி.ராமராவ் பெயர் சூட்டப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தங்கள் மாநிலத்தில் உள்ள ஒரு விமான நிலையத்துக்கு எங்களது அனுமதி இல்லாமல் மத்திய அரசு பெயர் சூட்டியிருப்பதை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பெயரை மாற்றக் கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பெயர் மாற்ற பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் முடங்கியது. இந்த நிலையில் என்.டி.ராமராவ் மரணம் குறித்து நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மனைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவபார்வதி தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘ஹைதராபாத் விமான நிலையத்துக்கு என்.டி.ராமராவ் பெயர் சூட்டியதால் தெலுங்கானா அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படப்போவது இல்லை.
தெலுங்கு மக்களின் தலைவராக என்.டி.ராமராவ் இருந்து உள்ளார். விமான நிலையத்துக்கு அவர் பெயர் சூட்டியிருப்பதன் மூலம் இரு மாநில மக்களின் நினைவு சின்னமாக அது இருக்கும். எனவே என்.டி.ராமராவ் பெயர் வைப்பதில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என முதல்வர் சந்திரசேகரராவை கேட்டுக் கொள்கிறேன்'' என்றார். அவர் மேலும், "நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. அனுமந்தராவ், என்.டி.ராமராவ் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார். நானும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவிடம் அதையே வலியுறுத்துகிறேன். என்.டி.ராமராவ் மரணத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது. என்னால்தான் என்.டி.ராமராவ் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது என்று சந்திரபாபு நாயுடு ஒரு சினிமா தயாரித்தார். என்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் புத்தகம் அச்சிட்டு வெளியிட்டார்.
தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணாக இருந்த என்னால் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது அனுமந்தராவ் பேசிய பின் மீண்டும் எனக்கு தைரியம் வந்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியும் மாறி உள்ளது. என்.டி.ராமராவ் மறைந்து 20 ஆண்டுகள் ஆன பிறகும் குற்றச்சாட்டுகளை சுமந்தபடி நான் வாழ்கிறேன். எனவே தெலுங்கானா அரசு என்.டி.ராமராவ் மரணம் குறித்து நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும். என்.டி.ராமராவ் மரணத்துக்கு முதல் நாள் அதாவது 1995 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி என்ன நடந்தது என்பது தெரிய வரும். சந்திரபாபு நாயுடு உண்மைகளை மறைத்து அதன் மீது கரியை பூசி உள்ளார். விசாரணை நடத்தி அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்''என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment