நடிகர் ராம்சரன் தேஜாவின் சவாலை ஏற்று தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார் நடிகை சமந்தா. பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான 'தூய்மை இந்தியா' திட்டத்தில் கோலிவுட் நடிகர்கள் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை இணைந்து செயல்படுத்தி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளில் தூய்மை இந்திய திட்டத்தை செயல்படுத்தினார். பிரபல நடிகர் ராம்சரண் தேஜா, தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து சுத்தம் செய்துவிட்டு, பின்னர் பிரபல நடிகைகள் தமன்னா, ஹன்சிகா, சமந்தா மற்றும் ராகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர்களுக்கு இந்த திட்டத்தில் இணைய சவால் விடுத்தார்.
இந்த சவாலை ஏற்ற நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அரசு பள்ளியை சுத்தம் செய்தார். பள்ளி மாணவிகள், சுத்தம் செய்யும் பணியாளர்களும் சமந்தா உடன் இணைந்து சுத்தம் செய்தனர். இவருடன் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் நீரஜா கோனா அவர்களும் இணைந்து அந்த பகுதியை சுத்தப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கருத்து தெரிவித்த சமந்தா, 'இந்தியாவை தூய்மைப்படுத்தும் பணியில் எனது பங்களிப்பும் ஒரு சிறுதுளி இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாகவும் இதேபோல் தன்னுடைய ரசிகர்களும் இந்த தூய்மைப்பணியில் ஈடுபடவேண்டும் என தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சமந்தா, நாட்டை தூய்மை படுத்தவது மிகச்சிறந்த பணி. ஸ்வச்ச பாரத் மிகச்சிறப்பான வேலையை செய்கிறது என்றார். தினசரி நமது இருப்பிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
சமீபத்தில் தமன்னா இந்த திட்டத்தில் இணைந்து மும்பையில் லோகந்த்வாலா என்ற பகுதியை சுத்தம் செய்தார். மேலும் அதன் அருகில் இருந்த ஒரு பள்ளியில் இருந்த குப்பைகளையும் தமன்னா குழுவினர் சுத்தம் செய்தனர்.
தமன்னா, சமந்தாவை அடுத்து ஹன்சிகா, ராகுல் ப்ரித்தி சிங் ஆகியோர்களும் தூய்மை இந்தியா பணியில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.பிரதமர் மோடி ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவை தூய்மைப்படுத்த வேண்டும் என்று கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
...............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment