அனுஷ்கா, தமன்னாவையடுத்து குதிரை சவாரி பயில்கிறார் சமந்தா. சமீபகாலமாக சரித்திரகால படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. ருத்ரம்மாதேவி, பாஹூபாலி போன்ற சரித்திர படங்களில் அனுஷ்கா நடித்து வருகிறார். இதற்காக அவர் குதிரை ஏற்ற பயிற்சியை பல மாதங்கள் பயின்றார். பாஹூபாலி படத்தில் நடிப்பதால் தமன்னாவும் குதிரை ஏற்றம் பழகினார். கோச்சடையான் படத்திற்காக தீபிகா படுகோன், லிங்கா படத்துக்காக சோனாக்ஷி சின்ஹாவும் குதிரை ஏற்ற பயிற்சி பெற்றனர். இவர்களைப் பார்த்து சமந்தாவுக்கும் சரித்தர கால படங்களில் நடிக்க ஆசை வந்துள்ளது. அப்படியொரு கதாபாத்திரம் கிடைத்தால் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்பதற்காக இப்போதே குதிரை ஏற்ற பயிற்சி பெற தொடங்கி இருக்கிறார்.
அடுத்து வாள் சண்டை பயிற்சிக்கும் தயாராகி வருகிறார். சமந்தாவின் இந்த முயற்சிக்கு திரிஷா ஊக்கம் அளித்திருக்கிறார். இதுபற்றி சமந்தா கூறும்போது,குதிரை ஏற்ற பயிற்சி இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன். குதிரையில் ஏறி சவாரி செய்யவேண்டும் என்பது எனது ஆசை. அதற்காகவே இதை கற்கிறேன் என்றார். சில நாட்களுக்கு முன் தூய்மை இந்தியா திட்டத்துக்காக சாலையை சுத்தம் செய்தார் தமன்னா. இதையடுத்து சமந்தாவும் ஐதராபாத்திலுள்ள அரசு பள்ளிக்கு சென்று தூய்மை பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment