கோச்சடையான் படத்தால் கொஞ்சம் பணத்தை இழந்தோம். ஆனால் சினிமா என்றால் என்னவென்பதை சவுந்தர்யா முழுமையாகக் கற்றுக் கொண்டார் என்றார் நடிகர் ரஜினிகாந்த். லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளின் இசைத் தகடுகள் வெளியாகின. ஆனாலும் தெலுங்கு மற்றும் இந்தியில் தனி நிகழ்ச்சிகளாக இசை வெளியீடு நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் ரஜினி பேசுகையில், "இந்த விழாவில் பலர் நிறைய விஷயங்கள் பற்றி பேசி விட்டனர். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மீண்டும் நடிக்க முடியுமா? டான்ஸ் ஆட முடியுமா? என்றெல்லாம் ஏங்கியதுண்டு. முன்பு மாதிரி நடிக்க முடியாது என்றே நினைச்சிக்கிட்டிருந்தேன்.
அதுக்கப்புறம் இரண்டரை வருஷம் கம்ப்ளீட்டா உடம்பு சரியில்ல. ஆக்ட் பண்றதுக்கெல்லாம் சான்ஸே இல்ல. அதுக்கப்புறம் கோச்சடையான் படததை எப்படியாவது ரிலீஸ் பண்ணிடனும்னு நினைச்சேன். அதோட ஜானரே வேற. யாருக்கும் சரியா புரியல. அந்தப் படத்துல ஒரு சின்னக் குழந்தை மலையையே தூக்கி வெச்சிக்கிட்டு கஷ்டப்பட்டுச்சி. பாவம், அவ்வளவு பெரிய சுமையை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்திருக்கக் கூடாது. ஈராஸ் இன்டர்நேஷனல், நண்பர் டாக்டர் முரளி மனோகர் ஆகியோர் இல்லேன்னா அந்தப் படம் ரிலீஸாகியிருக்கவே முடியாது. அந்தப் படத்துல கொஞ்சம் பணத்தை இழந்தாலும் கூட, அந்தப் படத்தால கிடைச்ச அனுபவம் மிகப்பெரிய சொத்து. ஏன்னா இனிமே அவங்க சம்பாதிச்சுத்தான் அவங்களைக் காப்பாத்திக்க வேண்டிய அவசியமில்ல. நான் சம்பாதிச்சதை வேஸ்ட் பண்ணாம இருந்தாலே போதும்.
கோச்சடையான் படம் அவங்களுக்கு சினிமான்னா என்ன? ரசிகர்கள்னா என்ன? இன்டஸ்ட்ரின்னா என்ன? பணம்னா என்ன? நேரம்னா என்ன? இதை எல்லாத்தையும் புரிய வச்சிடுச்சி. கோச்சடையான் முடிஞ்சதும் அடுத்த படத்துக்கு நான் ரெடி ஆகிட்டேன். இருந்தாலும் அந்தப் படத்தை ரிலீஸ் பண்ணாம அடுத்த படம் தொடங்க எனக்கு இஷ்டம் இல்ல. என்கிட்டே நிறைய பேர் கதை சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நான் கேட்டேன், ஆனால் உள்ள ஏத்திக்கலை. ஏன்னா கோச்சடையான் ரிலீஸ்ல சில பிராப்ளம்ஸ் இருந்தது. அதனால அதை முதல்ல ரிலீஸ் பண்ணிடனும்னு நினைச்சேன். எப்பவுமே ஒரு பிரச்சினை வந்தா உடனே அதைச் சரி பண்ணிடனும். இல்லன்னா அது வளர்ந்து பெரிய பிரச்சினையா வந்து நிக்கும். அதனால அது எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கூட உடனே முடிச்சிடணும். கோச்சடையான் ரிலீஸ் ஆன பிறகு அதை ஒரு 20 பேர்ல பத்துப் பேராவது, என்கிட்ட அட்லீஸ்ட் கடைசில ஒரு சீன்லயாவது வருவீங்க, இல்ல முதல்ல ஒரு சீன்ல வருவீங்கன்னு எதிர்ப்பார்த்தோம்னு சொன்னாங்க. அப்பத்தான் அடுத்த படத்தை உடனே ஆரம்பிக்கணும்னு நினைச்சேன்," என்றார் ரஜினி.
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment