↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கேள்வி: உங்கள் பிறந்த நாளுக்கு வெளியாக வேண்டிய சிட்டிசன் படத்துக்கான வெளியீடு தேதி மாற்றப்பட்டது ஏன்?
பதில்: மே ஒன்றாம் தேதி ரிலீஸ் பன்னும் திட்டம் இருந்த்து, ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்து விட்டாலும், இன்னும் ஒரு பாடல் ஷூட் பன்ன வேண்டியது பாக்கி இருக்கு. அந்த பாடல் ஷூட்டிங் முடிந்ததும் வரும் மே 18ம் தேதி கண்டிப்பா ரிலீஸ் ஆகிடும். படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகமா இருப்பதால் மேலும் கொஞ்சம் மெருகேத்தலும் நடந்துக்கிட்டு இருக்கு.

கேள்வி: உங்கள் படங்களில் சிறந்த படம் என சிட்டிசனை சொல்ல முடியுமா?
பதில்: கண்டிப்பாக சொல்ல்லாம். எனக்கு பெர்ஷனலா நூறு சதவீத திருப்தி இருக்கு. இது போல வித்தியாசமான் கெட்டப்புகளில் நான் இதுவரை நடிச்சது இல்லை. மக்களுக்கு ஆதரவா பேசும் கேரக்டர்களிலும் நடிச்சது இல்லை.

இது கண்டிப்பா வித்தியாசமான படமாவும், என்னாலயும் வித்தியாசமான படங்களை கொடுக்க முடியும் என நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இருக்கு. தமிழக மக்கள் மத்தியிலயும் என ரசிகர்கள் மத்தியிலயும் நல்லபடியா பேசப்படும்.

கேள்வி: பல கெட்டப்புகளில் நடிப்பது ரிஸ்க் இல்லையா?
பதில்: ரிஸ்க்தான். எந்த ஒரு வேலையிலயும் ரிஸ்க் இல்லாமல் இருக்காது, ரிஸ்க் எடுக்காம வெற்றியும் கிடைக்காது. ரஜினி சாருக்கு தெரியும் எப்படி ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வருவது என்று, கமல் சார் உலக சினிமாக்களுக்கு ஏத்த மாதிரி சினிமா தந்துக்கிட்டு இருக்கார். இவங்க ரெண்டு பேத்துக்கிட்ட இருந்துதான் சில விஷயங்களை நான் கத்துக்குறேன்.

இந்த வித்தியாசமான கெட்டப்புகள் மூலமா ஒரு புது அஜீத்தை நீங்க பாப்பீங்க.

கேள்வி: உங்கள் படங்களுக்கான பெயர்கள் தேர்ந்தெடுப்பது எப்படி?
பதில்: படங்களுக்கான பெயர் மூலம் அந்த படத்தைப்பற்றிய ஐடியா கிடைக்கனும். ரசிகர்களுக்கும் சட்டெனெ மனதில் பதியனும். படத்தின் பாதி வெற்றி பட பெயரில்தான் இருக்குன்னு நான் நம்பறேன். அதுக்கு ஏத்த மாதிரித்தான் பெயர்கள் பதிவு செய்யப்படுகிறது.

கேள்வி: சினிமாவுக்கு வந்து ஏதாவது சாதிச்சுருக்கதா நினைக்கிறீங்கலா?
பதில்: இதுமாதிரி நான் நினைப்பதே இல்லை. நேற்று என்பது எப்போதும் இல்லை, இன்று என்பது நிஜம், நாளை என்பது கேள்விதான். ஒரு நல்ல நிலைமையை அடைஞ்சுருக்கேன்னா அதுக்கு பின்னால என்னற்ற கஷ்டங்களும், வலிகளும், அவமதிப்புகளும் இருக்கு.

இதுவரைக்கும் இத்தனை வலிகளையும் அவமானங்களையும் எப்படி தாங்கிக்கிட்டு இந்த நிலைமைக்கு வந்தேனோ, அதே மாதிரியான மனவலிமை இன்னும் பத்து வருஷத்துக்கு இருக்கனுமுன்னு வேண்டிக்குறேன்…..,அதுக்கு பின்ன எல்லாம் கடவுள் செயல்.

கேள்வி: திருமணம் நடந்து ஒரு வருஷம் முடிஞ்சுடுச்சு. எப்படி இருக்கு ஷாலினியுடனான வாழ்க்கை?
பதில்: மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது சாதாரனமா சொல்லப்பட்டதில்லை. பெரியவர்களால் உணர்ந்து சொல்லப்பட்டது. எனக்கு அந்த மாதிரி மனைவி கிடைச்சது பாக்கியம். ஒருத்தர் வாழ்க்கையில் ஜெயிக்கனுமுன்னா அவருக்கு வீட்டில் நிம்மதியும் அமைதியும் கிடைக்கனும். எனக்கு என் ஷாலு மூலமா அவை கிடைக்குது. எனவே என்னால் வெற்றி பெற முடியுது. என் வெற்றிக்கு பின்னால் இருப்பது என் மனைவிதான். என் திருமணத்திற்கு பின் வாழ்க்கை தெய்வீகமா போயிட்டிருக்கு.

கேள்வி: திடிரென இந்தி சினிமாவில் நடித்தது எப்படி?
பதில்: இயக்குநர் & ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் கேட்டுகொண்டதாலவும், சாருக்கானுக்காகவும் ஒத்துக்கிட்டது, இந்தியிலயும் சொந்த குரலில் டப்பிங் பேசியது சந்தோஷமாக இருக்கு. மேலும் இந்தியில் சில வாய்ப்புகள் வருது, ஆனால் என்னோட முதல் விருப்பம் தமிழ்தான்.

கேள்வி: உங்கள் பின்னால் லட்சக்கனக்கான ரசிகர்கள் இருக்காங்க, அரசியலில் ஈடுபடும் என்னம் இருக்கா?
பதில்: நான் ஒரு சாதாரன நடிகன் மாத்திரமே, தலைவன் கிடையாது. எனக்கும் தனிப்பட்ட பிடித்தமான கட்சி இருக்கலாம், ஆனால் நான் ஒரு பிரபலம் என்பதால பொதுவில் அதை சொல்ல கூடாது. நான் யாருக்கு ஓட்டு போடுவேன்னும் சொல்ல கூடாது. அது தவறான செயலாகும்.
யார் நாட்டுக்கு நல்லது செய்வாங்க, யாருக்கு ஓட்டு போடனும் என்பது மக்களுக்கு நல்லாவே தெரியும். நான் சொல்லித்தான் அவங்க தெரிஞ்சுக்க வேண்டியதில்லை.  

என்னோட வேலை நடிப்பது, தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கனும், காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனுக்கு திருப்தி வரனும் அவ்வளவுதான். தேர்தலில் ஜெயிச்சவங்களுக்கும் தோத்தவங்களுக்கும் பொதுவான ஆளுத்தான் அஜித்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top