கடந்த சில வருடங்கள் விஜய் நடிக்கும் படங்கள் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வதும், பிறகு அதிலிருந்து படத்தை மீட்டு ரிலீஸ் செய்வதற்குள் படாத பாடு படுவதும் விஜய்யை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டதாம். குறிப்பாக கத்தி படத்தின் கதைத் திருட்டுப் புகார். இதற்கு முன் தனது வேறு எந்த படத்துக்கும் வராத புகார் கத்திக்கு எக்கச்சக்கமாக வந்துவிட்டது.
இயக்குநர் பக்கம் கதை திருட்டு, இசையமைப்பாளர் பக்கம் மியூசிக் திருட்டு, ஸ்டண்ட் மாஸ்டர் பக்கம் சண்டைக்காட்சிகள் திருட்டு. படத்தில் பல சீன்கள் ஆங்கிலப்படத்தில் இருந்து உருவப்பட்டவை என்று சொல்லிக்கொண்டே போகின்றனர். இந்த புகார்கள் எல்லாம் விஜய்யை வெகுவாக பதித்துள்ளதாம்.
அதாவது அடுத்தவர்கள் செய்யும் இந்த திருட்டு வேலையில் விஜய்யும் சேர்ந்து அடிபடுகிறார். ஒரு ஹீரோ இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்வார். அவர் காட்சிகளை, கதைகளை திருடி மாட்டிக்கொள்வதால் ஹீரோவுக்கும் கெட்டபெயர் ஏற்படுகின்றது. கத்தி படத்தில் நடந்த திருட்டு வேலைகளுக்கு விஜய்யும் உடந்தை என்பதை போல் தான் நிறைய பேர் முணுமுணுக்கின்றனர்.
இதனால் அடுத்தடுத்த படக் கதைகளில் கவனமாக இருக்க முடிவு செய்துள்ளார் விஜய். அடுத்து அவர் நடிப்பது சிம்பு தேவன் படத்தில் தான். இந்தப் படத்தின் கதை முழுக்க முழுக்க கற்பனையானது. லார்டு ஆப் த ரிங்ஸ் படத்தைப் போல அதி உச்ச கற்பனையாக இந்தக்கதை புனையப்பட்டுள்ளதாம்.
கதையைக் கேட்டதுமே, இது எந்தப் படத்தின் பாதிப்பும் இல்லாத கதைதானே என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட விஜய், இந்தப் படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியாக வேண்டும். குறிப்பாக படத்தில் வரும் சீன்கள் மற்ற படத்தில் இருந்து உருவவே கூடாது என்று இயக்குநர் சிம்பு தேவனிடம் கூறினாராம்.
அது மட்டுமில்லாமல் மற்ற இயக்குநர்களுக்கும் சில அட்வைஸ்கள் செய்துள்ளாராம். அது என்ன அட்வைஸ்கள் என்று சொல்ல மறுக்கிறார்கள் கோடம்பாக்க வட்டாரத்தினர். விஜய் அட்வைஸை ஒரு சில இயக்குநர்கள் ஏற்றுக்கொண்டாலும், சில இயக்குநர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.
...............................................................................................................
https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment