“எனக்கு மூளையில்லையா அடுத்தவர் கதையைக் காப்பியடிக்க..?” என்று என்னதான் ஏ.ஆர்.முருகதாஸ் ‘கத்தி’. ‘கத்தி’ பேட்டி கொடுத்தாலும், ‘அது வாஸ்தவம்தான்…’ என்பது போல அவர் காப்பியடித்து எடுத்த காட்சிகள் நாளொரு ஸ்டேட்டஸும், பொழுதொரு வீடியோவுமாக ‘ஃபேஸ்புக்’கில் சிரித்துக் கொண்டிருக்கிறது.
நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் ‘காப்பி’யைத் தொடர்ந்து இப்போது இணையங்களில் வலம் வரும் அவரது அடுத்த காப்பி, ‘கத்தி’ படத்தில் இடம்பெற்ற சில்லறை சண்டைக் காட்சி. சதீஷை விட்டு கரண்டை ஆஃப் செய்துவிட்டு, ஒவ்வொரு சில்லறையாகப் போட்டு, மெயின் ஸ்விட்சை ஆன் பண்ணச்சொல்லி விஜய் எதிரிகளை அடிப்பாரே, அதே சீன்தான்.
அந்தக் காட்சி இன்று நேற்றல்ல… 1974ல் – நாற்பது வருடங்களுக்கு முன் புரூஸ்லீ காலத்து அமெரிக்க சண்டைக்கலைஞர் ‘ஜிம் கெல்லி’ நடித்து வெளியான ‘பிளாக் பெல்ட் ஜோன்ஸ்’ படத்தில் வெளியானது. பழைய படம்தானே, யார் பார்த்திருக்கப் போகிறார்கள் என்று அடித்து விட்டார் போலிருக்கிறது ஏ.ஆர்.எம்..?
கதையைப் பொறுத்த அளவில், ‘கோபியை யாரென்று தெரியாது. நான் பார்த்ததில்லை…’ என்று அவர் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம், உலகம் நம்பலாம்… நீதி மன்றம் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளும். ஆனால், இப்படி இசையிலிருந்து, ‘ஃபர்ஸ்ட் லுக்’கில் இருந்து, காட்சிகளில் இருந்து அப்பட்டமாக அடித்த காப்பிகளுக்கு – இந்த ஆதாரங்களுக்கு… அவர் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்..?
விஜய், அஜித் போன்ற உச்ச ஸ்டார்கள் இனி கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. இதைப்போன்ற ‘காப்பி’ டைரக்டர்களின் கதைகளை, காட்சிகளை அது ஒரிஜினல்தானா என்று இனம் கண்டு நடிக்க ஒத்துக்கொள்ள வேண்டும். (ரசிகர்களும் தங்கள் ஹீரோக்களுக்கு அதை வலியுறுத்த வேண்டும்..!)
இல்லாவிட்டால் உங்களுக்கும் அவப்பெயரை சேர்த்து விடுவார்கள் இந்த ‘காப்பி’ இயக்குநர்கள்..! கீழை பிளாக் பெல்ட் ஜோன்ஸ் சண்டைக் காட்சி வீடியோ…
0 comments:
Post a Comment