உதவி இயக்குனர்கள் தரும் கதைகளின் புண்ணியத்தில் ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் 'கத்தி' திரைப்படம் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்துவிட்டதாக ஆள் ஆளாளுக்கு மாற்றி மாற்றி டுவிட்டரில் தங்கள் இஷ்டம் போல் தகவல் கொடுத்துக்கொண்டு வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத், விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் ஆகியோர்களின் டுவிட்டரில் எங்கு பார்த்தாலும் கத்தியின் வசூல் குறித்த ஸ்டேட்டஸ் தான் இருக்கின்றது. ஆனால் இந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பதை இன்னும் அதிகாரபூர்வமாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி உண்மையில் நல்ல ஹிட்தான் என்றாலும் படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டவில்லை என்கிறது இன்னொரு தகவல். ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் ஆகியோர்கள் அடுத்த படத்தில் தங்கள் சம்பளத்தை கணிசமாக ஏற்றுவதற்காக இவ்வாறு பில்டப் ஸ்டேட்டஸ்களை டுவிட்டரில் போட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து கூறிய பெயர் சொல்ல விரும்பாத விநியோகிஸ்தர் ஒருவர் கத்தி படம் சுமார் 60 முதல் 70 கோடி வசூல் செய்திருந்தாலே பெரிய விஷயம். கனடா மற்றும் பிரிட்டனில் இவர்கள் சொல்லும் வசூல் தொகை பொய்யானது. படக்குழுவினர் எதற்காக படத்தின் வசூலை அதிகரித்து சொல்கின்றனர் என்பது அனைவரும் தெரிந்ததுதான் என்கிறார்.

கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் இந்த வசூல் கலாச்சார பொய்கள் நடமாடி வருகிறது. மொக்கை படங்கள் எல்லாம் ரூ.200 கோடி வசூலித்துவிட்டது, ரூ,.300 கோடி வசூலித்துவிட்டது என்று அளந்து விடுகின்றனர். வெறும் ஒன்றரை ஸ்டார் வாங்கிய ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் திரைப்படம் ரூ.300 கோடி வ்சூலானது என கூசாமல் பொய் சொல்கின்றனர். அதே கலையை தற்போது கோலிவுட் பிரபலங்களும் கற்றுக்கொண்டுவிட்டனர்.
விஜய்க்கு பிரச்சனையில்லை. அடுத்த படத்தை அவருடைய மேனேஜரே தயாரிக்கவிருப்பதால் அவர் கேட்ட சம்பளம் வந்துவிடும். ஆனால் முருகதாஸின் அடுத்த படத்தயாரிப்பாளருக்குத்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment