கேரளாவில் தற்போதைய ஹாட் டாபிக் சரிதா நாயர் தான். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார். வெளியே வந்ததும் அவர் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி என்பவர் மீது பாலியல் புகார் கூறினார். மேலும் தன்னுடன் நெருக்கமாக இருந்த அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவலை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறினார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சரிதா நாயரின் நிர்வாண படங்கள் மற்றும் அரை நிர்வாண காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது. வாட்ஸ்அப்புகளிலும் பரவியது. இந்த தகவல் அறிந்ததும் சரிதாநாயர் ஆவேசமானார்.
இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், என்னை ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காக இந்த ஆபாச காட்சிகளை சிலர் வெளியிட்டுள்ளனர். அவற்றை இன்னும் நான் பார்க்கவில்லை. அந்த காட்சிகள் என் கவனத்திற்கு வந்ததும், அதை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
எனது ஆபாச காட்சிகள் வெளியானதால் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் என்னை அவமானப்படுத்தியவர்களை ஒழித்து கட்டாமல் விடமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.