கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் சரிதா நாயர். இவரது மோசடிக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் துணை போனதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
அதற்கேற்ப சரிதாநாயரும் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்தநிலையில் சரிதாநாயரின் நிர்வாண படங்கள் வாட்ஸ்–அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் சரிதா நாயர் நிர்வாணமாக நிற்பதும், உடை மாற்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இதை அறிந்து சரிதா நாயர் அதிர்ச்சி அடைந்தார். வாட்ஸ்–அப்பில் வெளியான காட்சிகளில் இடம்பெற்று இருப்பது நான் தான் என்பதை ஒப்புக்கொண்ட அவர் அந்த காட்சிகளை பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
அதன்படி நேற்று பத்தனம் திட்டாவில் உள்ள முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு கொடுத்தார்.
அதில் தனது ஆபாச காட்சிகளை வாட்ஸ்–அப் மற்றும் இணையதளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்திய நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
தகவல், ஒளிபரப்பு வரைமுறை சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
சரிதாநாயரின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு இதனை பத்தனம்திட்டா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து பத்தனம்திட்டா போலீசார் சரிதாநாயரின் ஆபாச படங்களை பரப்பியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது இணையதளம் மற்றும் வாட்ஸ்–அப்பில் பரவும் காட்சிகள் அனைத்துமே சுயமாக எடுக்கப்பட்ட காட்சிகள் போல் தெரிகிறது என்றும், இந்த காட்சிகள் வெளியான சில நிமிடங்களில் பல லட்சம் பேரின் வாட்ஸ்–அப்பில் பரவியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
முதலில் காட்சிகளை பரவ விட்டவர் யார்? என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது. அதனை சைபர்கிரைம் போலீசார் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினர்.
இதுபற்றி சரிதாநாயர் கூறும்போது எனது நிர்வாண படங்களை வெளியிட்டதன் பின்னணியில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் சதி இருக்கிறது. அவர்கள் என்னிடம் பலமுறை செல்போனில் மிரட்டல் விடுத்து வந்தனர். நேற்று கூட என்னை மிரட்டினர். சில அரசியல் பிரமுகர்களின் படங்களை நான் வெளியிட வேண்டும் என வற்புறுத்தினர். மறுத்தால் என்னை பற்றிய மேலும் படங்களை அவர்கள் வெளியிடுவார்கள் என்றும் மிரட்டினர். இந்த பிரச்சினையை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்’ என்றார்.
0 comments:
Post a Comment